full screen background image

‘க க க போ’ படத்தின் ஹீரோ கேசவன் நீரில் மூழ்கி மரணம்..?

‘க க க போ’ படத்தின் ஹீரோ கேசவன் நீரில் மூழ்கி மரணம்..?

‘க க க போ’ படத்தின் கதாநாயகன் கேசவன் இன்று மாலை மலேசியாவில் நடந்த விபத்தொன்றில் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

மலேசிய தமிழரான கேசவன் தமிழ்ப் படமான ‘க க க போ’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வந்தார். இந்தப் படத்தை புதுமுக இயக்குனர் விஜய்  என்பவர் இயக்கி இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

சமீபத்தில் சன் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் கேசவன் கலந்து கொண்டார். அது நாளை சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறதாம். அந்த நிகழ்ச்சியை தன் குடும்பத்தோடு சேர்ந்து பார்க்கவே மலேசியா சென்றிருக்கிறார் கேசவன்.

 

இன்று மாலை மலேசியாவில் Ipoh, b door என்னும் இடத்தில் அங்கிருந்த நீர்விழ்ச்சியை கண்டுகளித்துக் கொண்டிருக்கும்போது கேசவன், திடீரென்று நீரில் தவறி விழுந்திருக்கிறார். நீரின் அதிவேக சுழற்சியால் பெற்றோரின் கண் முன்பேயே அவர் நீருக்குள் இழுத்துச் செல்லப்பட்டாராம். தற்போது அவரது உடலை மலேசிய காவல் துறையினர் தேடி வருகின்றனராம்.

இந்தப் படத்தின் இசை வெளியிட்டு விழா அடுத்த வாரம் நடைபெற இருக்கிறது.​ இந்நிலையில் இந்தச் சோகச் செய்தியைக் கேட்டு ‘க க க போ’ படக் குழுவினர் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.    

 

Our Score