வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் கடலூர் மாவட்ட மக்களுக்கு உதவி செய்ய தென்னிந்திய நடிகர் சங்கத்தினர் முன் வந்திருக்கின்றனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தை சார்ந்த, சிதம்பரம் தாலுகாவில் அமைந்துள்ள கரிவேட்டை என்ற கிராமத்தைச் சார்ந்த மக்களுக்கு ‘The Environmentalist Foundation of India’ என்ற NGO மூலமாக தென்னிந்திய நடிகர் சங்கம் முதற்கட்ட பணியாக சில உதவிகளை மேற்கொண்டுள்ளது.
நடிகர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களான சோனியா, பசுபதி, கோவை சரளா, குட்டி பத்மினி, அயூப், ஹேமச்சந்திரன் ஆகியோர் மேற்பார்வையில் இந்த உணவுப் பொருட்களும், வீட்டுப் பொருட்களும் வாங்கப்பட்டுள்ளனவாம்.
இந்தப் பொருட்கள் அனைத்தும் நாளை காலை நடிகர் சங்க அலுவலகத்தில் இருந்து லாரி மூலமாக கடலூர் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட இருக்கிறது.
இந்த உதவித் தொகையில் 5 கிலோ அரிசி, 2 கிலோ பருப்பு, 2 கிலோ சீனி, 2 சமைக்கும் பாத்திரங்கள், தட்டுக்கள், 2 சாப்பாட்டு தட்டுக்கள், 2 டம்ளர்கள், 2 பெட்ஷீட்டுகள், 2 சேலைகள், 2 வேஷ்டிகள், 1 டீ ஷர்ட், 1 படுக்கை விரிப்பு ஆகியவையும் அடக்கம். நடிகர் அருள்நிதி 1,000 பெட்சிட்டுகளை அந்த மக்களுக்காக வழங்கியுள்ளாராம்.
“வெள்ள சேதங்களுக்கு உதவி செய்வது அரசாங்கத்தின் வேலை. நடிகர் சங்கத்தின் வேலை அல்ல…” என்று நடிகர் சங்கப் பொறுப்பாளர்கள் யாரோ சொன்னதாக வந்த செய்தியை அடுத்து இப்போதுவரையிலும் இணையத்தில் நடிகர் சங்கத்தை வறுத்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தச் சூழ்நிலையை மாற்ற வேண்டி அவசரம், அவசரமாக இன்றைக்கு இந்த ஏற்பாட்டை செய்திருக்கிறார்களாம்..!
ஏதோ நல்லது நடந்தால் சரி..!