“அனேகன்’ திரைப்படத்தை இயக்கம் செய்தது 7 மனைவிகளுடன் குடும்பம் நடத்தியபோல இருந்தது..” என்கிறார் அதன் இயக்குநர் கே.வி.ஆனந்த்.
அனேகன் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இயக்குநர் கே.வி.ஆனந்த், “இந்தப் படம் எனது முந்தைய படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. எனது முந்தைய படங்களை பார்த்தீங்கன்னா ‘கனா கண்டேன்’, ‘அயன்’, ‘கோ’ மூன்றுமே ஆக்சன் கலந்த கதைகள். ஆனால் இந்த ‘அனேகன்’ படம் முழுக்க முழுக்கவே ரொமான்ஸ் கலந்த காதல் படம்தான்.. நிறைய லவ் எக்ஸ்பிரீயன்ஸ் இந்தப் படத்துல இருக்கு..
இந்தப் படத்தோட கதையை தனுஷ்கிட்ட சொல்ல உக்காரும்போதே அவர் படத்துல நடிக்கிற பீலிங்குக்கு வந்துட்டாரு. கதையை சொல்லி முடிச்சவுடனேயே எந்த திருத்தமும் சொல்லலை.. எந்தக் கருத்தும் சொல்லலை.. ‘ஓகே’ன்னுட்டாரு. ஷூட்டிங்லேயும் அப்படித்தான்.. ‘இந்த ஷாட்ல இந்த டயலாக் ஸாரு’ன்னு சொல்லிட்டா போதும்.. ‘ஓகே’ன்னுட்டு ரெடியாயிருவாரு. ‘அது எதுக்கு..? இது எதுக்கு’ன்னு ஒரு கொஸ்டீன்கூட கேக்க மாட்டாரு. சில நேரம் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு நான் லேட்டா போவேன்.. ஆனா அவர் எனக்கு முன்னாடி ரெடியாகி தயாரா இருப்பாரு. அந்த அளவுக்கு டெடிகேஷன் பெர்ஸன் தனுஷ்..
இந்தப் படத்துல நான் இயக்குநரா வொர்க் செஞ்சதே பெரிய விஷயம்தான்.. ஏன்னா இதுல பங்கெடுத்தவங்க எல்லாருமே ஆளுக்கொரு கிரகம் மாதிரியிருப்பாங்க. எழுத்தாளர் சுபா-ல சு-வுக்கு படத்துல செண்டிமெண்ட் இருக்கணும்.. அக்கா, தங்கச்சி பாசம் இது மாதிரி இருக்கான்னு பார்ப்பார். பா-வுக்கு ஆக்சன், காமெடியெல்லாம் கலந்து இருக்கணும். இல்லைன்னா இவரும் ஒத்துக்க மாட்டார்..
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்.. அவருக்குப் பிடிச்சமான டியூன் வர்றவரைக்கும் நாம ஒத்துக்கிட்டாலும் அவர் ஒத்துக்க மாட்டார்.. இது போதும்னு சொன்னாலும்,, ‘இல்லையே.. இன்னும் சரியா வரலையே’ன்னு சொல்லிருவாரு.. எடிட்டர் ஆண்டனி.. அவர்கிட்ட உக்காந்தாலும் சண்டைதான். ‘இதெல்லாம் எதுக்கு.. அதான் அந்த கடைசி ஷாட்ல தெரிஞ்சிருச்சுல்ல.. அப்புறம் எதுக்கு இன்னொரு இன்ட்ரோ.. அதைத் தூக்கு’ன்னு சொல்லி அவரே தூக்கிருவார்.. இப்படியே எடிட்டிங் டேபிள்ல நிறைய சீன்ஸ் கட்டாயிரும். ஒளிப்பதிவாளர் ஒம் பிரகாஷ்.. பேசவே மாட்டார். ஆனா வேலைல மட்டும் கெட்டி. அவருக்கு புரிஞ்சிருச்சா இல்லையான்னு நாம யோசிச்சுத்தான் தெரிஞ்சுக்கணும். காஸ்ட்யூம்ஸ் பார்த்துக்கிட்ட அனு பார்த்தசாரதி.. பட டீடெயில்ஸை கொடுத்தவுடனேயே அடுத்தடுத்து போன் செஞ்சு.. காஸ்ட்யூமையெல்லாம் எப்போ பார்க்குறீங்கன்னு கேக்க ஆரம்பிச்சிட்டாரு.. இப்படி ஆளுக்கொரு பக்கமா இன்வால்மெண்ட்டோட வேலை பார்த்தாலும் எனக்கென்னவோ ஏழெட்டு மனைவிகளோட குடும்பம் நடத்துன மாதிரி கஷ்டமாத்தான் இருந்தது. இப்போ படத்துல ஒவ்வொரு சீனையும் பார்க்கும்போது அந்தக் கஷ்டமெல்லாம் போயிருச்சு…” என்றார்.










