அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியன்று எப்போதும்போல காந்தி தாத்தாவின் புகழ் பாட வேண்டிய இந்திய தேசத்தில், அன்றைக்கு காந்தியாரை நினைவுகூற வைக்காமல் மற்ககடிக்கும்விதமாக இப்போதைய பிரதமர் மோடியின் திட்டமிட்ட பரப்புரையினால் சுத்தமான இந்தியா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதில் மோடி அழைத்திருந்த சில பிரபலங்களைத் தவிர இப்போது மேலும் பல பிரபலங்களும் தெருவைக் கூட்ட கையில் விளக்குமாற்றோடு கிளம்பிவிட்டார்கள். சொந்த வீட்டில் இது போல விளக்குமாற்றை கையில் பிடித்திருப்பார்களா என்பது சந்தேகம்தான்..
லக்னோவில் நேற்றைக்கு முன் தினம் இரவோடு இரவாக கொண்டு வந்து நிரப்பப்பட்ட பேப்பர் குப்பைகளை ஆளுயுர விளக்கமாற்றோடு வந்து தெருவைக் கூட்டி பெயரெடுத்தார் நடிகை ஹேமமாலினி.
நேற்றைக்கு நடிகை தமன்னாவும் இந்த சுத்தப் போராட்டத்தில் குதித்துவிட்டார். நேற்றைக்கு மும்பையில் இருக்கும் Lokhandwala என்ற இடத்தில் இருக்கும் குடிசை பகுதிகளில் இருக்கும் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட தமன்னா அதனை புகைப்படமாகவும் எடுத்து தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் எந்த நடிகையும் இதுல இன்னமும் இறங்கலையே..? ஏன்..?