இன்று ஜூன் 6, 2014-ல் 5 நேரடி தமிழ்ப் படங்கள் வெளியாகியுள்ளன.
1. மஞ்சப் பை
இயக்குநர் சற்குணத்துடன் இணைந்து லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரித்திருககும் படம் மஞ்சப்பை.
இதில் விமல், ராஜ்கிரண், லட்சுமி மேனன், காதல் சரவணன், கும்கி அஷ்வின் ஆகியோர் நடித்திருக்கின்றனர். மாசாணி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இசை என்.ஆர்.ரகுந்தன். பாடல்களை யுகபாரதி எழுதியிருக்கிறார். எழுதி, இயக்கியிருக்கிறார் சற்குணத்தின் உதவியாளர் என்.ராகவன்.
2. உன் சமையலறையில்
பிரகாஷ்ராஜ் புரொடெக்சன்ஸ் சார்பில் நடிகர் பிரகாஷ்ராஜ் தயாரித்து, இயக்கி, நடித்திருக்கும் படம்.
மலையாளத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான ஆஷீக் அபு இயக்கிய ‘சால்ட் அண்ட் பெப்பர்’ என்ற படத்தின் ரீமேக்குதான் இந்தப் படம். இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ், சிநேகா, எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஊர்வசி, பூர்ணா, ரெஜினா கஸண்டரா, தம்பி ராமையா, இளங்கோ குமாரவேல் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இசைஞானி இளையராஜா இசையமைக்க, ப்ரீதா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கிஷோர் எடிட்டிங் செய்திருக்கிறார்.
3. ஒகேனக்கல்
எழில் தயாரிப்பு நிறுவனம் சார்பாக எ.தமிழ்வாணன், எஸ்.மூர்த்தி, P.T.S.திருப்பதி மூவரும் இணைந்து தயாரித்திருக்கும் படம் இது.
இந்தப் படத்தில் பாபு கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக மும்பையை சேர்ந்த ஜோதிதத்தா நடித்திருக்கிறார். இன்னொரு நாயகனாக பிருத்வி நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக ஸ்ராவியா நடித்திருக்கிறார். மற்றும் உமா பத்மநாபன், நளினி, லதாராவ், நிழல்கள் ரவி, டெல்லி கணேஷ், காதல் தண்டபாணி, கராத்தே ராஜா, ஆனந்த், அருள்மணி, முத்துகாளை, கிரேன் மனோகர், பிளாக்பாண்டி, தீப்பெட்டி கணேசன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – பி.ஜி.வெற்றி, இசை – சரண்பிரகாஷ், பாடல்கள் – விவேகா, எழில்வாணன், தென்றல் செந்தில், எடிட்டிங் – பி.மோகன்ராஜ், கதை-திரைக்கதை-வசனம்-இயக்கம் – எம்.ஆர்.மூர்த்தி.
4. அத்தியாயம்
ஆர்.எம்.ஏ. பிலிம் பேக்டரி தயாரித்திருக்கும் இப்படத்தை ஆர்.யுவன் இயக்கியிருக்கிறார். விஜய் வல்சன் ஒளிப்பதிவு செய்ய எஸ்.எஸ்.தமன் இசையமைத்திருக்கிறார்.
5. பூக்கடை சரோஜா
இது இலக்கணப் பிழை என்ற பெயரில் 2012-ல் வெளிவந்த ஒரு திரைப்படத்தின் இரண்டாம் பாகம்.












