டிரான்ஸ் இண்டியா மீடியா & எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் சார்பில் தயாரிப்பாளர் எம்.ராஜேந்திர ராஜன் தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘ஜாலியோ ஜிம்கானா’.
டிரான்ஸ் இண்டியா மீடியா & எண்டர்டெய்ன்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் கதைகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களைத் தயாரித்து வருகிறது.
இதற்கு முன்பு ‘நாகேஷ் திரையரங்கம்’ என்ற தமிழ்ப் படத்தையும் மராத்தி படம் ஒன்றையும் தயாரித்துள்ளது. இப்போது முழுக்க முழுக்க ஃபேமிலி எண்டர்டெயின்மெண்ட் படமாக ‘ஜாலியோ ஜிம்கானா’ என்ற படத்தை மிகப் பெரிய பொருட் செலவில் தயாரித்துள்ளது.
‘சார்லி சாப்ளின்’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் ஷக்தி சிதம்பரம் – பிரபுதேவா காம்போ மீண்டும் இந்தப் படத்தில் இணைந்துள்ளது.
இந்தப் படத்தில் பிரபுதேவா, மடோனா செபாஸ்டின், யோகிபாபு, அபிராமி, யாஷிகா ஆனந்த், புஜிதா பொன்னடா, ரெடின் கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன், ஜான் விஜய், ‘ஆடுகளம்’ நரேன், மதுசூதன் ராவ், ரோபோ சங்கர், சுரேஷ் சக்ரவர்த்தி, சாய் தீனா, எம்.எஸ். பாஸ்கர், ‘டாக்டர்’ சிவா, ‘கல்லூரி’ வினோத், கோதண்டம், ‘ஆதித்யா கதிர்’, ஆதவன், ‘தெலுங்கு’ ரகுபாபு, மரியா, அபி பார்கவன் உள்பட பலரும் நடித்துள்ளனர்.
இயக்குநர் – ஷக்தி சிதம்பரம், தயாரிப்பாளர் – எம்.ராஜேந்திர ராஜன், தயாரிப்பு நிறுவனம் – டிரான்ஸ் இண்டியா மீடியா & எண்டர்டெய்ன்மெண்ட் பிரைவேட் லிமிடெட், கலை இயக்கம் – ஜனார்த்தனன், படத் தொகுப்பு – ‘அசுரன்’, ’விடுதலை’ புகழ் ராமர், ஒளிப்பதிவு – கணேஷ் சந்திரா, நடன இயக்கம் – பூபதி ராஜா, சண்டை இயக்கம் – மகேஷ் மாத்திவ், பிரதீப், பாடல்கள் – மு.ஜெகன் கவிராஜ், பத்திரிக்கை தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா, டி ஒன்.
இந்தியத் திரையுலகில் இதுவரை கண்டிராத கதைக் களத்தை இந்தப் படம் கொண்டுள்ளது.
இந்தப் படத்திற்கு ‘ஜாலியோ ஜிம்கானா’ என்ற தலைப்பு ரசிகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது. தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதன் முறையாக ரசிகர்களால் ஒரு படத்தின் தலைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டது இந்தப் படத்திற்காகத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் படப்பிடிப்பு தென்காசி, கொடைக்கானல் மற்றும் தமிழகத்தின் தென்பகுதியில் உள்ள பல இடங்களில் நடந்துள்ளது.
படம் குறித்து இயக்குநர் ஷக்தி சிதம்பரம் பேசும்போது, “மக்களால் தேர்ந்தெடுத்த படத்தின் டைட்டில் மக்களிடம் எப்படி ரீச் ஆனதோ, அதுபோலவே இந்தப் படமும் ரீச் ஆகும்.
ஏனென்றால் படம் கதையாகவும், விஷுவலாகவும் அவ்வளவு ரிச் ஆக வந்துள்ளது. பட்ஜெட் ஆகவும் இது பெரிய படம். தயாரிப்பாளர் ராஜேந்திர ராஜன், பாடல்கள் மற்றும் ஆக்ஷன் காட்சிகளுக்கான பிரம்மாண்டமான செட்களை குறை வைக்காமல் செய்து தந்தார்.
படத்தின் திரைக்கதையைப் போலவே, பாடல்களும், இசையும் இந்தப் படத்தில் முக்கியமான ஒரு அம்சம். இசையமைப்பாளர் அஸ்வின் விநாயகமூர்த்தி அற்புதமான இசையைக் கொடுத்துள்ளார்.
கணேஷ் சந்திராவின் ஒளிப்பதிவும், ஜனார்த்தனனின் கலை இயக்கமும் படத்திற்கு பலமாக அமைந்துள்ளது.
பிரபுதேவா, மடோனா, யோகிபாபு, அபிராமி, யாசிகா ஆனந்த், புஜிதா பொன்னடா கிங்ஸ்ட்லி, எம்.எஸ்.பாஸ்கர், ரோபோ சங்கர், ஜான் விஜய், சாய்தீனா, மதுசூதனராவ், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட படத்தில் நடித்துள்ள மற்ற எல்லா நடிகர்களும் சிறப்பான பங்களிப்பை செய்துள்ளனர்.
மக்களை கொண்டாட வைக்கும் அளவில் உருவாகியுள்ள இப்படத்தின் வெளியீடு குறித்தான அறிவிப்பு விரைவில் வரும்” என்றார்.









