மலையாளத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘இரட்டா’ படத்தின் அதிகாரப்பூர்வ டிரெயிலர், தற்போது வெளியாகியுள்ளது.
அப்பு பாத்து பப்பு புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் படத்தின் நாயகனான ஜோஜு ஜார்ஜ், மார்ட்டின் பிரகாட் பிலிம்ஸ் மற்றும் சிஜோ வடகன் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.
இந்தப் படத்தில் ஜோஜு ஜார்ஜ் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். கதாநாயகியாக அஞ்சலி நடித்துள்ளார். மேலும் அஞ்சலி, ஸ்ரிந்தா, ஆர்யா சலீம், ஸ்ரீகாந்த் முரளி, சாபுமோன், அபிராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
சமீர் தாஹிர், ஷைஜு காலித், கிரீஷ் கங்காதரன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்ய, அன்வர் அலியின் மற்றும் முஹாசின் பராரி பாடல் வரிகள் எழுத மலையாளத்தில் பல ஹிட் பாடல்களை கொடுத்த ஜேக்ஸ் பிஜோவின் இசை அமைக்கிறார். மனு ஆண்டனி படத்தை தொகுத்துள்ளார். கலை இயக்கம் – திலீப் நாத், ஆடை வடிவமைப்பு – சமீரா சனீஷ், ஒப்பனை – ரோனெக்ஸ், சண்டை இயக்கம் – கே.ராஜசேகர். அறிமுக இயக்குநரான ரோஹித் எம்.ஜி.கிருஷ்ணன் இப்படத்தை இயக்கி உள்ளார்.
ஏற்கனவே பல மாநில மற்றும் தேசிய விருதுகளை பெற்றுள்ள ஜோஜு ஜார்ஜின் கேரியரில் இந்தப் படமும் இன்னொரு திருப்பு முனையாக அமையும் என்பதை இந்தப் படத்தின் டிரெயிலர் உறுதிப்படுத்துகிறது.
பல படங்களில் போலீஸ் வேடங்களில் நடித்திருக்கும் ஜோஜுவின் கேரியரில் இன்னொரு பவர்ஃபுல் போலீஸ் ரோலாக இந்தப் படத்தின் கதாப்பாத்திரம் இருக்கும் என்பதை சந்தேகமே இல்லாமல் சொல்லலாம்.










