படம் வெளியாக வேண்டிய தினத்தில் போஸ்டர்தான் வெளியானது..!

படம் வெளியாக வேண்டிய தினத்தில் போஸ்டர்தான் வெளியானது..!

YNot Studios நிறுவனத்தின் 18-வது படைப்பாக உருவாகும் புதிய தமிழ்த் திரைப்படமான ‘ஜெகமே தந்திரம்’ படத்தின் போஸ்டர் நேற்றைக்கு வெளியானது.

இத்திரைப்படத்தை YNot Studios நிறுவனம், ரிலையன்ஸ் என்டர்டெயிண்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது.

இத்திரைப்படத்தில் தனுஷ் நாயகனாக நடிக்கிறார். ஐஸ்வர்யா லட்சுமி நாயகியாக நடித்திருக்கிறார்.

மேலும் சஞ்சனா நடராஜன், ஜேம்ஸ் காஸ்மோ, ஜோஜூ ஜார்ஜ், கலையரசன், செளந்தர்ராஜா, தீபக் பரமேஷ், தேவன், வடிவுக்கரசி, சின்னி ஜெயந்த், ராமச்சந்திரன் துரைராஜ், ராஜு பாய், சரத் ரவி, ஜெர்மைன், தன்வீர் கான், நேசந்த் பெர்னாண்டோ, முத்துக்குமார், அஷ்வந்த் அசோக்குமார், ரூபன் நாதன், ராபர்ட் மெக்ரா, கைரன் மெக்கிவர்ன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒரு கேங்ஸ்டர்-திரில்லர் வகையைச் சார்ந்த இப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார்.

தயாரிப்பாளர்கள் - ஒய் நாட் ஸ்டுடியோஸ் எஸ் சஷிகாந்த் & ரிலையன்ஸ் எண்டர்டெயின்மென்ட் சக்கரவர்த்தி இராமசந்திரா, ஒளிப்பதிவு - ஸ்ரேயாஸ் கிருஷ்ணா, இசை - சந்தோஷ் நாராயணன், படத் தொகுப்பு - விவேக் ஹர்ஷன், கலை இயக்கம் - வினோத் ராஜ்குமார், சண்டை இயக்கம் – அன்பறிவ், நடன இயக்கம் - எம் செரிஃப், பாபா பாஸ்கர், ஒலி வடிவமைப்பு - விஷ்ணு கோவிந்த், ஸ்ரீசங்கர், தயாரிப்பு ஒருங்கிணைப்பு - முத்துராமலிங்கம், ஆடை வடிவமைப்பு - D.பிரவீன் ராஜா, ஒப்பனை: ஏ.சபரி கிரீசன், விளம்பர வடிவமைப்பு - டியூனி ஜான் (24 AM), மக்கள் தொடர்பு - நிகில் முருகன், எழுத்து, இயக்கம் – கார்த்திக் சுப்பராஜ்.

2018 பிப்ரவரி மாதமே இத்திரைப்படம் அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்போது தனுஷ் பல்வேறு படங்களின் படப்பிடிப்பில் மாட்டிக் கொண்டதால் இத்திரைப்படம் ஒரு வருட காலத்திற்கும் மேலாக தள்ளிப் போய் 2019 ஆகஸ்ட் மாதம்தான் படப்பிடிப்புக்கே தயாரானது.

2019 செப்டம்பரில் இங்கிலாந்தில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 20 நாட்கள் நடைபெற்றது.

உண்மையில் இத்திரைப்படம் நேற்றைக்கு மே 1-ம் தேதியன்று வெளியாகியிருக்க வேண்டியது. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பினால் திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில் இத்திரைப்படமும் வெளியாகாத படங்களில் பட்டியலில் இடம் பிடித்துவிட்டது.

இந்த நிலையில் இந்தப் படத்தில் போஸ்டர் நேற்றைக்கு வெளியிடப்பட்டது. யேசு நாதர் போஸில் தனுஷ் இருக்கும் அந்தப் போஸ்டரை தனுஷ் ரசிகர்கள் இந்த நிமிடம்வரையிலும் கொண்டாடி வருகிறார்கள்.