full screen background image

“உங்க தலைப்புச் செய்திக்கு நானா கிடைச்சேன்?” – ஜெயம்ரவியின் நழுவல் பேச்சு..!

“உங்க தலைப்புச் செய்திக்கு நானா கிடைச்சேன்?” – ஜெயம்ரவியின் நழுவல் பேச்சு..!

கழுவுற மீனில் நழுவுற மீனாக தெரிகிறார் ஜெயம் ரவி. காலங்கள் உருண்டோட பத்திரிகையாளர்களை சமாளிப்பது எப்படி என்பதைவிட அவர்களை மடக்குவது எப்படி என்பதையும்  கற்றுக் கொண்டுவிட்டார் ஜெயம்ரவி.

நேற்றைக்கு நடந்த ‘நிமிர்ந்து நில்’ சக்ஸ்ஸ் பிரஸ் மீட்டில் நெகிழ்ச்சி, உண்மை, அன்பு, பாசம், கேலி, கிண்டல் எல்லாமும் கலந்த ஒரு கலவையாக இருந்தது ஜெயம்ரவியின் பேச்சு..

“இன்னிக்கு எனனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. என்னோட கேரியர்ல இந்தப் படம் ஒரு முக்கியமான படம். இந்த படத்தோட வெற்றிக்கு டைரக்டர் சமுத்திரக்கனி சார்தான் காரணம். படத்தோட கதையை அவர் என்கிட்ட சொல்லும்போதே ஒரு நல்ல படத்தை பார்த்த உணர்வு எனக்குள்ள ஏற்பட்டுச்சு. படம் முடிஞ்சி ரிலீஸ் ஆகிறவரைக்கும் அந்த உணர்வு அப்படியே இருந்துச்சு. ரிலீசானதுக்கப்புறம் அதைவிட ஒரு பெரிய உணர்வை மக்கள் கொடுத்தாங்க.

சமுத்திரக்கனி பார்க்க்த்தான் கொஞ்சம் முரடு மாதிரி தெரிவாரு. ஆனா பழகிப் பார்த்தா அண்ணன் மாதிரியிருக்காரு. எனக்கு இந்தப் படத்துல நிறைய ஹெல்ப் பண்ணினாரு.. என்னோட கெட்டப்பை இந்த அளவுக்கு மாத்தி… எனக்காக ஒரு வெற்றி படத்தைக் கொடுத்திருக்காரு.. இதுக்காக இந்த அண்ணனுக்கு எனது நன்றிகள்..! இந்தப் படம் தானா என்னைத் தேடி வந்தது.. வந்த வாய்ப்பை நான் நழுவ விடலை..

என்னுடைய தொடர்ச்சியான பல படங்கள் காதல் படங்களாகத்தான் இருக்கும். ஆனா இடைல கமர்ஷியல் கலந்த ஆக்சன் படங்களையும் சேர்த்தே செஞ்சிருக்கேன். இப்போ நான் நடிச்சுக்கிட்டிருக்குற படங்களும் அப்படித்தான்.. இப்போ காதல் படங்கள்ல நடிக்கிறேன். அடுததது ஆக்சனும் வரும்..” என்றார்..

கேள்வி நேரம் வந்தவுடன் சராமரியாக பறந்து வந்த கேள்விகளுக்கு பயமே இல்லாமல்.. தயக்கமே இல்லாமல் ரிவிட் அடித்தார் ஜெயம் ரவி.

“சாக்லெட் பாய் இமேஜ் என்னாச்சு…?” என்று ஒருவர் கேட்க.. “அதை உடைக்கத்தாங்க ரொம்ப முயற்சி பண்ணிக்கிட்டிருக்கேன். நீங்கதான் விட மாட்டேன்றீங்க.. ஒரு ஹீரோன்னா இவர் இதுக்குத்தான் லாயக்குன்ற ஒரு இமேஜுக்குள்ள மாட்டிக்க்க் கூடாதுன்னு நினைக்கிறவன் நான். இனிமேலும் என் படங்கள் இப்படித்தான் இருக்கும்..” என்றார்.

ஒரு குசும்பான பத்திரிகையாளர், “சில நடிகர்கள் நிகழ்ச்சிக்கு வரும்போது பவுன்சர்களை துணைக்குக் கூட்டிட்டு வர்றாங்க.. நீங்க கூட்டிட்டு வரலியா..?” என்று கேட்க பட்டென்று கற்பூரமாகப் பிடித்துக் கொண்டார் ஜெயம் ரவி.

“இப்போ உங்களுக்கு ஒரு தலைப்புச் செய்தி வேணும். அதான.. அதெல்லாம் எனக்கு வேணாம்ண்ணே.. வேணும்னா நமீதாவை பத்தி கேளுங்க.. வேற யாரைப் பத்தியாவது கேளுங்க.. சொல்றேன்.. நமக்கெதுக்கு இது..? நீங்க யாரைப் பத்தி கேக்குறீங்கன்னு எனக்கு நல்லா தெரியும்.. ஒரு ஹீரோவை பத்தி, இன்னொரு ஹீரோ கமெண்ட் பண்றது நல்லாயிருக்காது..” என்று சொல்லி நழுவிக் கொண்டார். (இந்தச் சம்பவம் நேற்றுதான் நடந்தது. இணையத்தில் மட்டும்தான் அந்தச் சம்பவங்கள் பற்றிய கட்டுரைகள் வந்திருக்கின்றன. அப்போ ரவி அப்டேட்டாதான் இருக்காரு…)

Our Score