full screen background image

சமுத்திரக்கனிக்கே செலக்டிவ் அம்னீஷியாவா..?

சமுத்திரக்கனிக்கே செலக்டிவ் அம்னீஷியாவா..?

நிஜமாகவே சக்ஸ்ஸ் பார்ட்டி கொண்டாடப்பட வேண்டிய படம்தான் ‘நிமிர்ந்து நில்’. திருச்சியில் மட்டுமே இப்படம் இதுவரையிலும் ரிலீஸாகவில்லை. திருச்சி மாநகரத்திற்கென்றே தனியாக ஒப்பந்தம் செய்து வாங்கிய விநியோகஸ்தர்கள் ஒரு அட்வான்ஸ் தொகையை மட்டுமே கொடுத்தவர்.. முழுப் பணத்தையும் தராததால் தயாரிப்பாளரும் அங்கே படம் திரையிட அனுமதிக்காமல் இருக்கிறார்..

அது போகட்டும்.. சக்ஸ்ஸ் பிரஸ் மீட்டிற்கு இயக்குநர் சமுத்திரக்கனியுடன் வருகை தந்தார் நடிகர் ஜெயம்ரவி. முதலில் பேசிய சமுத்திரக்கனி மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக பல இடங்களிலிலும் இருந்து தனக்கு பாராட்டுக்கள் வந்து குவிந்ததை சொல்லி பெருமைப்பட்டார்.

“பாலசுப்ரமணியம்ன்னு ஒருத்தர் தனியா ஒரு சிலரை சேர்த்துக் கொண்டு சமூக சேவைகளெல்லாம் செய்றாரு.. அவர் எனக்கு போன் பண்ணி.. ‘படம் பார்த்தோம் ஸார்.. நாங்க 20 பேர் இதை இன்னும் 200 பேர்கிட்ட கொண்டு போகணும்னு நினைச்சிருக்கோம். அவ்ளோ நல்லாயிருக்கு’ன்னு சொன்னாரு.. நிறைய கல்லூரிகள்ல இருந்து என்னை பேசக் கூப்பிடிருக்காங்க.. எல்லாம் இந்தப் படத்துனாலதான்..

மொதல்ல இந்தக் கதையை வேறொரு ஹீரோவுக்காகத்தான் ரெடி செஞ்சிருந்தேன். பட்.. அது முடியாத்தால ஜெயம்ரவி நடிக்க வேண்டியதாகிப் போச்சு.. பத்திரிகைகளும் நிறையவே எங்களுக்கு சப்போர்ட் செஞ்சு உதவி பண்ணியிருக்கீங்க.. உங்களுக்கெல்லாம் ரொம்ப நன்றி..” என்றார்.

“இடைவேளைக்கு பின்பு படம் தொய்வடைந்த்து போல தெரிந்ததே..?” என்று நிருபர்கள் கேட்டதற்கு, “உண்மையா இந்தப் படத்துல இடைவேளை பிளாக்தான் கிளைமாக்ஸ்.. அதோட படம் முடிஞ்சிரும். அதுக்கப்புறம் மிச்சம், மீதிக் கதையை ஒரு காமெடியா, கமர்ஷியலா கொண்டு போகணும்ன்னுதான் நினைச்சிருந்தேன். அதுனாலதான் அந்த ஜெயம் ரவியின் ஆந்திரா கேரக்டரை கொண்டு வந்தேன்..” என்றார்.. நிருபர்கள் அதிலும் திருப்தியடையாமல் போக.. “தேனி பக்கம் போயிருந்தேன்.. நிறைய பேர் இடைவேளைக்கப்புறமும் படம் நல்லாயிருக்குன்னுதான் சொன்னாங்க..” என்று சொல்லி நிருபர்களுக்கு திண்டுக்கல் பூட்டு பூட்டினார்.

அவர் மேலும் பேசுகையில், “படத்தில் நடித்திருக்கும் நமோ நாராயணனின் அப்பா, ஜெயம் ரவியின் கேரக்டருக்கு ஒரு இன்ஸ்பிரேஷனா இருந்தார். அவர் போஸ்டல் டிபார்ட்மெண்ட்ல் வேலை பார்த்து ரிட்டையர்டானவர். கடைசிவரைக்கும் யார்கிட்டேயும் கை நீட்டாதவர்.. எங்களையும் அப்படித்தான் இருக்கச் சொல்றாரு.. அவரும் இந்தப் படத்தைப் பார்த்திட்டு பாராட்டினாரு..” என்றவரின் பேச்சில் இருந்த ஒரேயொரு முட்டாள்தனமான வாதம்.. வால்டர் தேவாரம் பற்றியது..

வால்டர் தேவாரம் பற்றிய பல சர்ச்சைகள், வழக்குகள், மலைவாழ் மக்களின் புகார்கள்.. மனித உரிமை அமைப்புகளின் உண்மைக் குற்றச்சாட்டுகள் வெளியில் சொல்லப்பட்டிருக்க.. இது எதையும் நீதிமன்றத்தில் சந்திக்காமல் இ்பபோதுவரையிலு்ம் தனது செல்வாக்கால் தப்பித்து வருகிறார் வால்டர் தேவாரம்.

சமுத்திரக்கனிக்கு இது அனைத்தும் தெரிந்திருந்தும், தேவாரத்தை ஏதோ பெரிய மகான்போல பாவித்து.. “அவர் டெல்லில இருக்கார்.. விளையாட்டு சம்பந்தமான விஷயங்கள்ல மூழ்கியிருக்கிறதால இப்போ எதுவும் பேச முடியலை. சென்னைக்கு வந்து பேசுறேன்னு சொன்னாரு..” என்று பக்தி பரவசமாகச் சொன்னது ஏன் என்றுதான் தெரியவில்லை..!

சமுத்திரக்கனிக்கே செலக்டிவ் அம்னீஷியாவா..?

Our Score