full screen background image

தயாரிப்பாளரின் இயக்குநரான ‘ஜாக்சன் துரை’ இயக்குநர் தரணிதரன்..!

தயாரிப்பாளரின் இயக்குநரான ‘ஜாக்சன் துரை’ இயக்குநர் தரணிதரன்..!

‘பர்மா’ புகழ் இயக்குனர் தரணிதரன் இப்பொழுது இயக்கிக் கொண்டிருக்கும் படம் ‘ஜாக்சன் துரை’.

இப்படத்தில் சத்யராஜ், சிபிராஜ், பிந்துமாதவி, கருணாகரன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர்.

jackson durai stills

இயக்குனர் தரணிதரன் திட்டமிட்டபடி 35 நாட்களில் படப்பிடிப்பை முடித்திருக்கிறார். ‘ஜாக்சன் துரை’ படமும் நன்றாக வந்துள்ளதால் தயாரிப்பாளர் M.S.சரவணன் மற்றும் படக் குழு மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிறது.

_MG_2592

‘பர்மா’ மற்றும் ‘ஜாக்சன் துரை’ ஆகிய இரண்டு படங்களையுமே இயக்குநர் தரணிதரன் 35 நாட்களில் முடித்துக் கொடுத்துள்ளதால் ‘தயாரிப்பாளரின் இயக்குநர்’ என்ற பெயரை பெற்றுள்ளார். தற்போது இந்தப் படத்தின் போஸ்ட் புரடெக்‌ஷன் வேலை மிக வேகமாக நடந்து கொண்டிருக்கிறது.

_MG_1817

இந்தப் படம் தயாரிப்பில் இருக்கும்போதே படத்தின் தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமையை ‘தேனாண்டாள் பிலிம்ஸ்’ பெரும் தொகை கொடுத்து வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. மிக விரைவில் பிரம்மாண்டமான இந்த ‘ஜாக்சன் துரை’ படத்தை திரையில் காணலாம்.

Our Score