பா.ரஞ்சித் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கிறாரா..?

பா.ரஞ்சித் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கிறாரா..?

இயக்குர் பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘மெட்ராஸ்’, ‘கபாலி’, ‘காலா’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ரஞ்சித் சமீபத்தில் இயக்கி வெளியான படம் ‘சார்பட்டா பரம்பரை’. இந்தப் படத்தைப் பார்த்த நடிகர் கமல்ஹாசன் ரஞ்சித்தை நேரில் அழைத்து வெகுவாகப் பாராட்டினார். 

இதையடுத்து இருவருடைய பேச்சுக்களில் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பும், ரஞ்சித் போன்ற இளைய தலைமுறை இயக்குநர்களின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பதற்கு ஆர்வமாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து ரஞ்சித் கமல்ஹாசனை இயக்க தன் விருப்பதைத் தெரியப்படுத்தியிருக்கிறார் இதனை கமல்ஹாசனும் ஏற்றுக் கொண்டுள்ளார்.

தற்போது கமல் நடித்துக் கொண்டிருக்கும் விக்ரம் படத்திற்கு பிறகு பா.ரஞ்சித் இயக்கும் புதிய படத்தில்  கமல்ஹாசன் நடிப்பார் என்று தெரிகிறது.

கடந்த 7-ம் தேதி, கமல்ஹாசனின் பிறந்த நாள் அன்று இயக்குநர் பா.ரஞ்சித், கமலிடம் கதையை சொன்னதாகவும், அந்தக் கதை கமலுக்குப் பிடித்திருந்ததால் கமல் ஓகே சொல்லிவிட்டதாகவும் கமல் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது. பா.ரஞ்சித்தும் இந்த வாய்ப்புக் குறித்து மிகவும் உற்சாகமாக இருக்கிறார்.

இந்த புதிய கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாக நாளாகும் என்று தெரிகிறது.

ஏனெனில் விக்ரம் படத்தில் நடித்து முடித்த பிறகு, மலையாள இயக்குநர் மகேஷ் நாராயணனுடன் கமல்ஹாசன் ஒரு புதிய படத்தில் கை கோர்க்கிறார்.

அதன் பிறகு வெற்றி மாறனுடன் இணைந்து ஒரு படம் செய்யவும் கமல் ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால், இந்தப் படம் தள்ளிப் போகும் என்றே தெரிகிறது. ஏனெனில் கமல் படத்திற்கு முன்பாக வெற்றி மாறன் முடிக்கவிருக்கும் ‘வாடி வாசல்’ படத்தின் ஸ்கிரிப்ட் ஒர்க்கே இன்னமும் முடியவில்லையாம்.

அது முடிந்து படப்பிடிப்பு துவங்கி முடித்து படம் வெளியாகி அதன் பின்பே கமல் பக்கம் வெற்றி மாறன் வர முடியும்.

அதற்குள்ளாக கமல், இந்தியன்-2’ படத்திலும் நடிக்க வேண்டியுள்ளது. இதனால் இந்த பா.ரஞ்சித்-கமல்ஹாசன் படம் 2023-ம் ஆண்டுதான் துவங்கும் என்று தெரிகிறது.

Our Score