full screen background image

“காஸ்டிங் ஏஜெண்டுகளை நியமிக்கவில்லை” – ராஜ்கமல் பிலிம்ஸ் எச்சரிக்கை!

“காஸ்டிங் ஏஜெண்டுகளை நியமிக்கவில்லை” – ராஜ்கமல் பிலிம்ஸ் எச்சரிக்கை!

தங்களது பெயரில் மோசடியில் ஈடுபடுபவர்களுக்கு கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயனின் அமரன் படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது ராஜ் கமல் நிறுவனம் தற்போது ரஜினியின் தர்மன் சிவகார்த்திகேயனின் சேயோன் கமலஹாசன் நடிக்கும் சண்டியர் ஆகிய திரைப்படங்களை தயாரித்து வருகிறது. 

தற்போது பல நிறுவனங்களின் படங்களுக்காக நடிகர்கள் தேர்வு என்று ஏமாற்றும் போக்கு திரையுலகில் அதிகரித்திருக்கிறது. 

இந்த நிலையில் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

அதில் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களுக்காக எந்த ஒரு காஸ்டிங் ஏஜெட்டுகளையும் நாங்கள் நியமிக்கவில்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். 

நாங்கள் தயாரிக்கும் திரைப்படங்களில் வாய்ப்பு வாங்கித் தருவதாக வரும் செய்திகள் எவ்வகையில் உங்களை வந்தடைந்தாலும் அதை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறோம். 

எங்களது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பெயரை அனுமதியின்றி பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்ட ரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதன் மூலம் எச்சரிக்கிறோம் என தெரிவித்துள்ளது.

Our Score