‘ஹர ஹர மஹாதேவகி’ கூட்டணி மீண்டும் இணையும் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’

‘ஹர ஹர மஹாதேவகி’ கூட்டணி மீண்டும் இணையும் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’

ப்ளு கோஸ்ட் பிக்சர்ஸ் சார்பில் K.E.ஞானவேல்ராஜா தயாரித்து வழங்கும் புதிய படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’.

இதில் கௌதம் கார்த்திக், ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், கருணாகரன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – தருண் பாலாஜி, இசை – பாலமுரளி பாலா, படத் தொகுப்பு – பிரசன்னா G.K., கலை இயக்கம் – சுப்ரமணிய சுரேஷ், எழுத்து, இயக்கம் – சன்தோஷ் பி.ஜெயக்குமார்.

இப்படம் பற்றி இயக்குநர் சன்தோஷ் பி,ஜெயக்குமார் பேசும்போது, “இந்தப் படமும் ‘ஹர ஹர மஹாதேவகி’ போலவே ஒரு அடல்ட் ஹாரர் காமெடி ஜேனரில் உருவாகும் படம்தான்.

JMES7056

இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் வெளிநாடுகளில் நடைபெறுகிறது. நாயகியாக நடிப்பதற்கு முன்னணி நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இறுதியானவுடன் விரைவில் அறிவிப்போம். படத்தின் சிங்கிள் ட்ராக் விரைவில் வெளியாகும்…” என்றார்.

இந்த புதிய படத்தின் பூஜை இன்று காலை நடைபெற்றது. இந்த பூஜை நிகழ்ச்சியில் நடிகர்கள் கவுதம் கார்த்திக், ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், இயக்குநர் சன்தோஷ் பி.ஜெயக்குமார், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மற்றும் படக் குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

Our Score