இளைஞர்களை கவர்ந்திழுக்கும் ‘ஹிப் ஹாப்’ தமிழா ஆதியின் ‘காதலிக்காதே’ பாடல்..!

இளைஞர்களை கவர்ந்திழுக்கும் ‘ஹிப் ஹாப்’ தமிழா ஆதியின் ‘காதலிக்காதே’ பாடல்..!

அதர்வா கதாநாயகனாக நடிக்கும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் நயன்தாரா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதர்வாவுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ளார்.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகிவரும் இந்த திரில்லர் படத்தில் பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் வில்லின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘Cameo Films’ C.J.ஜெயக்குமார் இப்படத்தை தயாரித்துள்ளார்.  

இப்படத்தில் இடம் பெற்றிருக்கும் ‘காதலிக்காதே’ என்கிற பாடல் சில தினங்களுக்கு முன் ரிலீஸ் செய்யப்பட்டது.  தனது காதல் தோல்விக்கு கதாநாயகியை தாக்காமல்,  நெருங்கிய நண்பரை திட்டும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடல், இப்போது இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது.

பாடலின் சூழ்நிலையும் சுவாரஸ்யமான இசையமைப்பும் இப்பாடலை இளைஞர்கள் மத்தியில் மாபெரும் ஹிட்டாக்கியுள்ளது.

நாளுக்கு நாள் புதிய உயரங்களை தொட்டுக் கொண்டிருக்கும் ‘ஹிப் ஹாப்’ தமிழா ஆதியின் இசையமைப்பில் இப்படம் உருவாகிவருகிறது. அவரது ஹிட் வரிசையில் இந்த ‘காதலிக்காதே’ பாடலும் இடம் பிடித்துள்ளது.

”நடிகர், நடிகையர், இயக்குநர்களை தவிர சுவாரஸ்யமான டீசர், டிரெயிலர் மற்றும் பாடல்களே மக்களை திரையரங்கிற்கு வரவைக்கின்றன. எந்த ஒரு பாடலுக்கும் அதன்  மையக் கரு மிக முக்கியமானதாகும். இயக்குநர் அஜய் ஞானமுத்துவும்,  இசையமைப்பாளர் ‘ஹிப் ஹாப்’ தமிழா ஆதியும் முற்றிலும் வேறுபட்ட பாணியில் இந்த பாடலை உருவாக்கவேண்டும் என்று தீவிரமாக இருந்ததாலேயே ‘காதலிக்காதே’ பாடல்  பிறந்தது…” என்று உற்சாகத்துடன் கூறுகிறார் ‘Cameo Fims’ நிறுவனத்தின் தயாரிப்பாளரான C.J.ஜெயக்குமார்.

Our Score