full screen background image

சென்னையில் சர்வதேச குறும்பட விழா..!

சென்னையில் சர்வதேச குறும்பட விழா..!

சென்னையில் வரும் பிப்ரவரி 20-23 ஆகிய தேதிகளில் சர்வதேச குறும்பட விழா நடைபெறவுள்ளது. ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்யன் கல்ச்சுரல் சென்டரில் இந்த விழா நடக்கவுள்ளது. இந்த விழாவில் 138 குறும்படங்கள் போட்டியிட உள்ளன.

சென்னை நிர்வாகவியல் சங்கத்தின் துணையோடு சென்னை அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் என்கிற அமைப்பு இந்த விழாவை நடத்துகிறது.  இந்த விழாவில் மூன்றுவிதமாக போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

கதைகளை மையமாக்க் கொண்டு 20 நிமிடங்களுக்கு மிகாமல் இருக்கும் குறும்படங்கள். ஆவணப்படமாக தயாரிக்கப்பட்ட 20 நிமிடங்களுக்கு மிகாமல் இருக்கும் குறும்படங்கள்.. அனிமேஷன் படமாகத் தயாரிக்கப்பட்ட 20 நிமிடங்களுக்கு மிகாமல் இருக்கும் குறும்படங்கள் என 3 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இவைகள் அனைத்துமே கடந்த 2 ஆண்டுகளுக்குள் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும்..

3 பேர் கொண்ட நடுவர் குழு சிறந்த படங்களைத் தேர்வு செய்யவுள்ளது. நடிகை ரோகிணி, எடிட்டர் ஸ்ரீஹர் பிரசாத், நடிகர் அபிஷேக் இவர்கள்தான் அந்த நடுவர்கள். முதல் பரிசு பெறும் படத்திற்கு 40000 ரூபாய், இரண்டாம் பரிசு பெறும் படத்திற்கு 20000 ரூபாய்.. நடுவர்களின் சிறப்புப் பரிசு பெறும் படத்திற்கு 20000 ரூபாயும் பரிசாக வழங்கப்படும்.

19 நாடுகளைச் சேர்ந்த 138 திரைப்படங்கள் இதில் இடம் பெறுகின்றன.  போட்டி இல்லாத கண்காட்சி பிரிவுகளில் துருக்கி, பிரான்ஸ், எஸ்தோனியா ஆகிய நாடுகளின் குறும்படங்கள் இடம் பெறும். மேலும் இந்தியன் பனோரமாவில் காட்டப்பட்ட படங்கள், சர்வதேசத் திரைப்பட விழாக்களில் பங்கு கொண்ட குறும்படங்களும் காண்பிக்கப்படவுள்ளன.

குறும்படங்கள் ரஷ்யன் கல்ச்சுரல் சென்டரிலும், வடபழனியில் இருக்கும் சிவாஜிகணேசன் பிலிம் இண்ஸ்டிட்டியூட்டிலும் திரையிடப்படவுள்ளன. சர்வதேச குறும்பட விழாவின் துவக்க நாள் நிகழ்ச்சிகள் பிப்ரவரி 20-ம் தேதி மாலை 5.30 மணிக்கு ரஷ்யன் கல்ச்சுரல் சென்டரில் நடைபெறவுள்ளது. பரிசளிப்பு விழா அதே ரஷ்யன் கல்ச்சுரல் சென்டரில் பிப்ரவரி 23-ம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.

பிலிம் சொஸைட்டிகளின் உறுப்பினர்கள், பிலிம் இன்ஸ்ட்டியூட் மாணவர்கள், கல்லூரிகளில் விஷுவல் கம்யூனிகேஷன் படிக்கும் மாணவர்கள், நடிகர், நடிகையர், திரையுலக அமைப்புகளில் உறுப்பினர்களாக இருப்பவர்கள், அரசு அதிகாரிகளுக்கு இலவச அனுமதியுண்டு. இதற்காக தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள அழைக்கிறார்கள்.

அலுவலக முகவரி

Chennai International Short Film Festival – 2014

21 |11, First Floor, 3-rd cross Street, Seethammal Extension,

Teynampet, Chennai – 600 018:

programmercisff@gmail.com

Phone : 9003258256

Our Score