full screen background image

சுனைனா நடிக்கும் ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ இணையத் தொடர் மார்ச் 29-ல் வெளியாகிறது..!

சுனைனா நடிக்கும் ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ இணையத் தொடர் மார்ச் 29-ல் வெளியாகிறது..!

பிரைம் வீடியோ ஓடிடி தளத்திற்காக மேக் பிலீவ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சுக்தேவ் லஹிரி தயாரித்துள்ள இணையத் தொடர் இன்ஸ்பெக்டர் ரிஷி’.

இந்த ஒரிஜினல் தமிழ் இணையத் தொடரில், சுனைனா, கண்ணா ரவி, மாலினி ஜீவரத்தினம், ஸ்ரீகிருஷ்ண தயாள் மற்றும் குமரவேல் ஆகியோருடன் இணைந்து நவீன் சந்திராவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கிரைம், திரில்லர் பாணியில் உருவாகியிருக்கும், 10 எபிசோடுகள் கொண்ட இந்த இன்ஸ்பெக்டர் ரிஷி’ திரைப்படம் இந்தியா மற்றும், உலகம் முழுவதிலும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் வரும் மார்ச் 29-ம் தேதியன்று பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

மர்மங்களால் சூழப்பட்ட சிக்கலான மற்றும் விசித்திரமான நிகழ்வுகளை எதையும் சந்தேகக் கண்களுடன் அணுகும் ரிஷி நந்தன், என்ற காவல் ஆய்வாளர் ஆராயத் தொடங்கும்போது, அவரது உறுதியான கருத்துக்களுக்கு எதிரான சவால்களை எதிர்கொள்ள நேரும் அவரது பயணத்தின் ஒரு அழுத்தமான கதையை இந்த இன்ஸ்பெக்டர் ரிஷிதொடர் விவரிக்கிறது.

மனதை நிலைகுலையச்செய்யும் இந்த திகில் மற்றும் மர்மம் நிறைந்த வழக்கின் விசாரணையின்ஊடே, குற்றத்தின் மர்ம முடிச்சுக்களை அவிழ்க்கும் முயற்சிகளை மேற்கொள்ளும்போதும் தனது ஆழ்மனதில் பீறிட்டு எழும் உணர்வுகளை கையாளும் போதும் இரு நிலைகளிலுமே இன்ஸ்பெக்டர் ரவி அச்சமூட்டும் மாபெரும் தடைகளை எதிர்கொள்கிறார்.

இத்தொடர் பற்றி இயக்குநர் ஜே.எஸ்.நந்தினி பேசும்போது, “ஒரு படைப்பாளியாக, ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’  தொடரில் பணி புரிந்தது ஒரு ஆழ்ந்த மகிழ்ச்சிகரமான அனுபவமாக இருந்தது. இந்த கூட்டாண்மைக்கு  நான் மிகவும் நன்றி பாராட்டுபவனாக இருக்கிறேன்.

திகில் மற்றும் மர்மங்களுடன் போலீஸ் நடைமுறைகளை ஒருங்கிணைத்து வழங்கியது. கதை சொல்லல் செயல்பாடுகளில் ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’யின் அச்சமூட்டும் விந்தையான உலகத்தினுள் மேலும் ஆழமாக சென்று ஒரு புதிய பரிமாணத்தை ஆராய எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது” என்றார்.

Our Score