full screen background image

ஏப்ரல் 4-ம் தேதி ‘கள்வன்’ ரிலீஸ் ஆகிறான். உஷார்..!

ஏப்ரல் 4-ம் தேதி ‘கள்வன்’ ரிலீஸ் ஆகிறான். உஷார்..!

ஆக்சஸ் பிலிம் பேக்டரி ஜி.டில்லி பாபு வழங்கும், இயக்குநர் பிவி ஷங்கர் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் குமார்-பாரதிராஜா நடிக்கும் ‘கள்வன்’ படம் ஏப்ரல் 4 அன்று வெளியாகிறது என்பதைப் படக் குழு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது.

தமிழ்த் திரையுலகின் மிகவும் பிரபலமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி, நம்பிக்கைக்குரிய பல வெற்றித் திரைப்படங்களை உருவாக்கியுள்ளது.

தற்போது ஜி.வி.பிரகாஷ் குமார், இவானா மற்றும் பாரதிராஜா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘கள்வன்’ என்ற படத்தை உருவாக்கியுள்ளது.

ஏற்கனவே, இயக்குநர் பாலாவின் ‘நாச்சியார்’ படத்தில் ஜி.வி.பிரகாஷ், இவானா இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளனர். இந்தப் படத்தில் நக்கலைட்ஸ் டீம் ஜென்சன் திவாகர், பிரசன்னா பாலச்சந்திரன், தீனா, ஜி.ஞானசம்பந்தம், வினோத் முன்னா மற்றும் நிவேதிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தயாரிப்பாளர் – ஜி.டில்லி பாபு, தயாரிப்பு நிறுவனம் – ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி, ஒளிப்பதிவு, இயக்கம் – பி.வி.ஷங்கர், இசை – ஜி.வி.பிரகாஷ் குமார், படத் தொகுப்பு – சான் லோகேஷ், கலை இயக்கம் – என்.கே.ராகுல், சண்டை இயக்கம் – திலிப் சுப்பராயன், கதை – ரமேஷ் ஐயப்பன், பி.வி.சங்கர், திரைக்கதை – பி.வி.ஷங்கர், ரமேஷ் ஐயப்பன், வசனம் – ரமேஷ் ஐயப்பன், ராஜேஷ் கண்ணா, பி.வி.சங்கர், கூடுதல் திரைக்கதை – S.J.அர்ஜுன், சிவகுமார் முருகேசன், நிர்வாக தயாரிப்பு – பூரணேஷ், தயாரிப்பு நிர்வாகம் – எஸ்.எஸ்.ஸ்ரீதர், கிரியேட்டிவ் தயாரிப்பாளர் – கே.வி.துரை, பாடல்கள் – சிநேகன், ஏகாதேசி, மாயா மகாலிங்கம், நவக்கரை, நவீன் பிரபஞ்சம், ஆடை வடிவமைப்பாளர் – கிருஷ்ண பிரபு, புகைப்படங்கள் – இ.ராஜேந்திரன், உடைகள் – சுபியர், ஒப்பனை – வினோத் சுகுமாரன், பத்திரிக்கை தொடர்பு – சுரேஷ் சந்திரா, விளம்பர வடிவமைப்பாளர் – வின்சி ராஜ்.

இத்திரைப்படம் வரும் ஏப்ரல் 4-ம் தேதியன்று வெளியாகிறது.

Our Score