மலையாளத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் துளசிதாஸ் தமிழில் இயக்கும் முதல படம் ‘இனி வரும் நாட்கள்.’
MJD புரொடக்சன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் முழுக்க, முழுக்க பெண்கள் மட்டுமே நடித்திருக்கிறார்கள். ஒரு ஆண் கதாபாத்திரம்கூட இல்லையாம்.
இனியா, ஆர்த்தி, சுபிக்சா, ஈடன், அர்ச்சனா ஆகியோர் இதில் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நதியா நடிக்கிறார் .
ஒரு டாக்குமெண்டரியை படமாக்கப் போகும் கல்லூரி மாணவிகளின் பயணத்தில் நடக்கும் எதிர்பாராத சம்பவமும், அதை தொடர்ந்து நடக்கும் அதிர்ச்சியான விஷயங்களையும், சஸ்பென்ஸ் கலந்த திரில்லர் திரைக்கதையாக அமைத்திருக்கிறார்களாம்.
“படத்தில் கதாநாயகிகள் இருக்கிறார்கள் கதாநாயகன் எங்கே..?” என்று கேட்டதற்கு “திரைக்கதைதான் படத்தின் நாயகன்..” என்கிறார் இயக்குனர் துளசிதாஸ்.
“இந்தப் படத்தில் பெண்கள் மட்டும் ஏன்..?” என்ற கேள்விக்கு, “எல்லா படங்களிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் கிடைப்பதில்லை. ஆனால் இந்த படம் முழுவதுமே பெண்கள் மட்டும் நடிப்பதால், அவர்கள் தங்கள் திறமையை வெளிகாட்ட ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது. பாட்டு, சண்டை, காமெடி என்று பொழுதுபோக்கு அம்சங்களும் படத்தில் நிறைய இருக்கின்றன” என்கிறார் இயக்குநர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது கம்பம், நாகர்கோவில், தேக்கடி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
தயாரிப்பு – எம் . ஜே .டி புரொடக்சன் .
இயக்கம் – துளசி தாஸ்
ஒளிப்பதிவு – சஞ்சீவ் சங்கர்
கதை – மனோ ரஞ்சித்
வசனம் – துரைபாண்டி
இசை – எம்.ஜி. ஸ்ரீ குமார்
நடனம் – கூல் ஜெயந்த்
சண்டை பயிற்சி – மாபியா சசி
கலை – ஜஸ்டீன்
தயாரிப்பு நிர்வாகம் – அமிர்தா மோகன் .
பி ஆர் ஓ – குணா
இனி வரும் காலம் அவர்கள் கைகளில்தான் என்பதை இந்தப் பெண்கள் மட்டுமேயான படத்தின் மூலமாக மறைமுகமாக உணர்த்துகிறார்களோ..?









