மென்பனி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சர்பாக தயாரிப்பாளர் மணிகண்டனும், மற்றும் ழகரலயா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பிரியதர்ஷிணியும் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘இன்ஃபினிட்டி’.
இந்தப் புதிய திரைபடத்தில் ‘நட்டி’ கதாநாயகனாக நடிக்கிறார். நட்டி இந்தப் படத்தில் புதுவிதமான தோற்றத்தில் இருப்பாராம். இவருடன் வித்யா பிரதீப், ராமதாஸ் (முனிஸ்காந்த்), ‘மெட்ராஸ்’ சார்லஸ் வினோத், முருகானந்தம், ‘ராட்சசன்’ வினோத் சாகர், மற்றும் பல முன்னணி நடிகர்களும் நடிக்கிறார்கள்.
வித்தியாசமான கதைக் களத்தைக் கொண்ட இப்படம் ஒரு உண்மை சம்பவத்தை மையமாக உருவாகிக் கொண்டிருக்கிறது.
இசை – டாம் ஜோ, ஒளிப்பதிவாளர் – விஷ்ணு கே.ராஜா, படத் தொகுப்பு – எஸ்.என்.ஃபாசில், சண்டை இயக்கம் – சில்வா, மக்கள் தொடர்பு – நிகில் முருகன். அறிமுக இயக்குநரான சாய் கார்த்திக் இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.
தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது.