அனுகிரஹா ஆர்ட் பிலிம்ஸ் சார்பில் உமா சங்கர் தயாரிக்கும் புதிய படம ‘இணையதளம்’.
இதில் கணேஷ் வெங்கட்ராம் ஹீரோவாக நடிக்கிறார். மலையாள நடிகையான ஸ்வேதா மேன்ன் ஹீரோயினாக நடிக்கிறார். இவர் ஏற்கெனவே கே.பாக்யராஜின் ‘துணை முதல்வர்’ படத்தில் நடித்திருப்பது நினைவிருக்கலாம். மேலும் சுகன்யா, ஈரோடு மகேஷ், ஜி.கெளசிகா மற்றும் பலர் நடிக்கின்றனர்.
ஒளிப்பதிவு – கார்த்திக் ராஜா, இசை – அரோல் கரோலி, படத் தொகுப்பு – ரிஜீஷ், கலை – சி.சி.ஆனந்தன், நடனம் – பிரபு சீனிவாஸ், சண்டை பயிற்சி – மாபியா சசி, மக்கள் தொடர்பு – நிகில் முருகன், பாடல்கள், வசனம் – மரபின் மைந்தன் முத்தையா, இயக்கம் – சங்கர், சுரேஷ்.
இந்தப் படத்தின் பூஜை நிகழ்ச்சி இன்று காலை சென்னையில் நடைபெற்றது.
Our Score