ஹாலிவுட் சண்டை இயக்குநரின் உருவாக்கத்தில் ‘இமைக்கா நொடிகள்’

ஹாலிவுட் சண்டை இயக்குநரின் உருவாக்கத்தில் ‘இமைக்கா நொடிகள்’

கேமியோ பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் சி.ஜே.ஜெயக்குமார் தயாரிக்கும் திரைப்படம் ‘இமைக்கா நொடிகள்.’

இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டாரினி நயன்தாரா மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருக்கு இணையான கதாபாத்திரத்தில் நடிகர் அதர்வா நடிக்கிறார். புதுமுகம் ராஷி கண்ணா மற்றும் பிரபல ஹிந்தி இயக்குநர் அனுராக் காஷ்யப் மிக முக்கிய வேடத்தில் நடிக்க.. இவர்களுடன்  கௌரவ  வேடத்தில் நடிக்கிறார் விஜய் சேதுபதி.

இந்தப் படத்தை இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார். இவர் ‘டிமாண்ட்டி காலனி’ திரைப்படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எந்த வேடத்தை ஏற்றுக் கொண்டாலும் அந்த பாத்திரத்தின் தன்மைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு தனக்கான பெயரை ஈட்டிக் கொள்வதில் சமர்த்தர் நடிகர் அதர்வா. ஒரு action ஹீரோவுக்கு உரிய கட்டுமஸ்தான உடலமைப்பு, குரல்  வளம், நடிப்பு திறன் மற்றும் தோற்ற அமைப்பு கொண்ட அதர்வா தற்போது நடித்து வரும் ‘இமைக்கா நொடிகள்’ படம் மூலம் ஒரு முழுமையான action ஹீரோவாக உருவெடுப்பார் என பெரிதும் நம்புகிறது தமிழ்த் திரையுலகம்.

பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகும் இந்த ‘இமைக்கா நொடிகள்’ படம் தமிழ்த் திரையுலகில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படமாக இருக்கிறது.

சமீபத்தில் பெங்களூரு நகரில் படமாக்கப்பட்ட  இந்த படத்தின் ஒரு சண்டை காட்சி சர்வதேச தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.  Honkong-ஐ சேர்ந்த leehonyiu  என்கிற உலக புகழ் பெற்ற சைக்கிள் ஸ்டண்ட் நிபுணர், சண்டை இயக்குனர் ஸ்டன் சிவாவுடன் இணைந்து  பணியாற்றிய இந்த சண்டை காட்சியில் அதர்வாவுடன் பல சண்டை கலைஞர்களும் பங்கு பெற்றனர்.

“இயக்குநர் இந்த காட்சியை விவரித்தவுடன் இதை எப்படி பிரம்மாண்டமாக, மற்றவர்கள் பிரமிக்கும்படி செய்ய முடியும் என்று சிந்திக்க ஆரம்பித்தேன். அதர்வா போன்ற வளர்ந்து வரும் ஒரு action ஹீரோவுக்கு இப்படி ஒரு பிரம்மாண்டம் அவசியம் என்பதை உணர்ந்து ஹாலிவுட் ஸ்டண்ட்  இயக்குநர் ஒருவரை கொண்டு வந்து உள்ளேன்.  இத்தகைய பிரம்மாண்டமே இந்தப் படத்தை இமை மூடவிடாமல் திரையை ரசிக்க செய்யும்…” என்றார் தயாரிப்பாளர் சி.ஜே.ஜெயக்குமார்.

Our Score