இசைஞானி இளையராஜாவின் குடும்பத்தில் அவரைத் தவிர, அவரது தம்பி கங்கை அமரன், இவரது மகன்களான வெங்கட்பிரபு, பிரேம்ஜி, இசைஞானியின் மூத்த மகன் கார்த்திக் ராஜா, இளைய மகன் யுவன்சங்கர்ராஜா, மகள் பவதாரிணி என்று இத்தனை பேரும் இசையமைப்பாளராக இருக்கிறார்கள்.. இப்போது இன்னும் ஒருவரும் இசையமைப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறார்.
அவர் இசைஞானியின் அண்ணன் பாவலர் வரதராசனின் மகன் பாவலர் சிவா.. இவருடைய இசையமைப்பில் ‘மகாமகா’ என்றொரு படம் தயாராகியுள்ளது. இப்படத்தி்ன் இசையைக் கேட்டு மகிழ்ந்த இளையராஜா தனது அண்ணன் மகன் பாவலர் சிவாவை பெரிதும் பாராட்டியதோடு இல்லாமல், இந்தப் படத்தின் ஆடியோவையும் தானே வெளியிட்டுச் சிறப்பித்துள்ளார்..!
எத்தனை பேர் வேணும்ன்னாலும் பண்ணைப்புரம் குடும்பத்துல இருந்து வரலாம். அதுல ஒருத்தராச்சும் கிராமத்து இசைல இசைஞானியை திரும்பவும் கொண்டு வரணும்ன்றதுதான் தமிழ் இசை ரசிகர்களின் எதிர்பார்ப்பு..!