full screen background image

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் மீது ‘பகீர்’ புகார்..!

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் மீது ‘பகீர்’ புகார்..!

இதுவரையிலும் இப்படியொரு புகார் இவர் மீது வந்ததில்லை..! இவர் நடுவராக இருக்கும் இசை நிகழ்ச்சிகளில் மிகவும் கோபப்பட்டு வார்த்தைகளைக் கொட்டுகிறார். பாட வருபவர்களை ஏளனம் செய்கிறார்.. போட்டியாளர்களை அவமானப்படுத்துகிறார் என்கிற ரீதியில்தான் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் மீதான எதிர்ப்பலைகள் மிதந்து வந்தன.

பல செலிபரேட்டிகளுக்கும் குடும்ப நண்பர். இவரா இப்படி என்றொரு கேள்வியை இன்றைக்கு எழுப்பிவிட்டார் ஜேம்ஸ் வசந்தன். புகார் கொடுத்திருப்பதே இவருடைய மனைவி சுகந்திதான்..

இன்று மதியம் அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் சுகந்தி கொடுத்திருக்கும் புகாரில், “எனக்கும் என் கணவரான ஜேம்ஸ் வசந்தனுக்கும் 23 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சியில் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடந்தது. எங்களுக்கு ஷில்பா என்ற மகளும், சச்சின் என்ற மகனும் இருக்கிறார்கள். 

இந்த நிலைமையில் எனது கணவர் ஜேம்ஸ் வசந்தன், ஹேமலதா என்ற பெண்ணுடன் தொடர்பு வைத்திருக்கிறார். இப்போது வெளியிடங்களில் அவரையே தனது மனைவி என்று சொல்லி வருகிறார். முறைப்படி என்னிடமிருந்து விவகாரத்து பெறாத நிலையில் அவர் இவ்வாறு இன்னொரு பெண்ணுடன் வாழ்ந்து வருவது சட்டப்படி தவறு. இதற்காக என் கணவர் மீது போலீஸ் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்..” என்று கூறியிருக்கிறாராம்..!

கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் பக்கத்து வீட்டுக்காரம்மாவோட சண்டை போட்டார் என்கிற வழக்கில் ஜேம்ஸ் வசந்தன் கைது செய்யப்பட்டார். அப்போது மீடியாக்களிடம் வந்து தம்பதி சகிதமாக பேசினார் ஜேம்ஸ். அப்போது அவருடன் இருந்த ஹேமா என்பவரே தனது மனைவி என்றே கூறினார். இவரைத்தான் சில வருடங்களாக பல நிகழ்ச்சிகளிலும் ஜேம்ஸ் வசந்தனுடன் பார்க்க முடிந்தது..

முதல் மனைவி சுகந்தி இத்தனையாண்டுகள் ஏன் அமைதியாக இருந்தார் என்றும் தெரியவில்லை. சென்ற மாதம் ஜேம்ஸ் வசந்தன் தனது பேஸ்புக் பக்கத்தில்கூட மனைவி ஹேமலதா மற்றும் தனது மகன்களாக தேஜாஸ், சச்சின் என்று இருவரை அறிமுகப்படுத்தியிருந்தார். 

இப்போது சுகந்தி கொடுத்திருக்கும் புகாருக்குப் பின்புதான் ஹேமலதா அவருடைய இரண்டாவது மனைவியென்றும், ஹேமலதாவின் முதல் திருமணத்தின் மூலம் பிறந்த தேஜாஸையும் தனது மகனாக ஜேம்ஸ் வசந்தன் சொல்ல ஆரம்பித்திருப்பது தெரிய வருகிறது..!

ஒண்ணுமே புரியலே உலகத்திலே..!

Our Score



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *