full screen background image

சரண்யா-கோவை சரளா-கல்பனா பாட்டிகளாக நடிக்கும் ‘இட்லி’ திரைப்படம்

சரண்யா-கோவை சரளா-கல்பனா பாட்டிகளாக நடிக்கும் ‘இட்லி’ திரைப்படம்

பாட்டிகளுக்கும், கதைகளுக்கும் மரபு வழி தொடர்பு உண்டு. நம் நாட்டுச் சூழலில் கதைகள்  எல்லாமே பாட்டிகள் வழியேதான் நமக்குக் கிடைத்தன. இப்படி கதைகளுக்குப் பெயர் போனவர்களான பாட்டிகளைப் பற்றிய கதைதான் இன்பா டிவிங்கிள் வில்லி என்பதன் சுருக்கமான இட்லி படமாக உருவாகி வருகிறது.

‘கதம் கதம்’ வெற்றிப் படத்தை தயாரித்த அப்பு மூவிஸ் நிறுவனமே இப்படத்தையும் தயாரிக்கிறது.

எப்போதும் பாட்டிகளுக்கு தற்போதைய அசுர வளர்ச்சியான தொழில் நுட்பம் தெரியாதவர்களாகவே இப்பார்கள். அதுவே இந்தப் படத்தில் வரவிருக்கும் நகைச்சுவைக்கு நாற்றங்காலாகியிருக்கிறது.

தொழில் நுட்பமோ,  இன்றைய விஞ்ஞான வளர்ச்சி பற்றியோ தெரியாத 3 பாட்டிகள் இருக்கிறார்கள். அவர்களின் பேத்திக்கு ஒரு பிரச்சினை வருகிறது. அதிலிருந்து தங்களது பேத்தியை மீட்க அவர்கள் ஒரு விபரீதமான முடிவையெடுக்கிறார்கள். அதிலும் இந்தக் கால டெக்னாலஜி பற்றி எதுவும் தெரியாமலேயே அதையே பயன்படுத்தி தங்களது பேத்தியைக் காப்பாற்ற நினைக்கிறார்கள். அது எப்படி என்பதுதான் கதை..” என்கிரார் இந்தப் படத்தின் இயக்குநரான வித்யாதரன்.

இவர் ஏற்கெனவே தமிழில் சரத்குமார் நடித்த ‘வைத்தீஸ்வரன்’ மற்றும் கன்னடத்தில் உபேந்திரா நடித்த ‘நியூஸ்’ ஆகிய படங்களை இயக்கியவர்.

படத்தில் நடிக்கும் 3 பாட்டிகளில் ‘இன்பா’வாக தேசிய விருது பெற்ற சரண்யாவும், ‘ட்விங்கிளாக’ நகைச்சுவை நாயகி கோவை சரளாவும், ‘வில்லி’யாக காமெடி குயீன் கல்பானாவும் நடிக்கிறார்கள். பேத்தியாக நடிப்பவர் ‘சலீம்’ படத்தில் நடித்த அஸ்கிதா. இவர்களுடன் ‘கத்தி’ அனு கிருஷ்ணா, மனோபாலா, ‘லொள்ளுசபா’ சுவாமிநாதன், இமான் அண்ணாச்சி, மனோகர், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் ஆகியோரும் நடிக்கின்றனர்.

கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். தரண் இசையமைக்கிறார்.  உமா சங்கர் கலை இயக்கம் செய்கிறார். ஜெய்பிரவீன் எடிட்டிங் செய்கிறார். பாபு தூயவன், ஜி.கார்த்திக் ஆகியோர் தயாரித்திருக்கின்றனர்.

இதன் படப்பிடிப்பு கடந்த மே 8-ம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Our Score