full screen background image

“இந்தப் படத்தை வாங்க மாட்டேன்” – உதயநிதி ஸ்டாலின் மறுப்பு..!

“இந்தப் படத்தை வாங்க மாட்டேன்” – உதயநிதி ஸ்டாலின் மறுப்பு..!

Srinivasaa Silver Screen பேனர் சார்பில் தயாரிப்பாளர் ஸ்ரீநிவாசா சிட்தூரி தயாரித்துள்ள படம் தி வாரியர்’.

இந்தப் படத்தில் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நாயகனாக நடித்துள்ளார். கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் பிரபலமான ஆதி பினிஷெட்டி. இந்தப் படத்தில் வில்லனாகவும், தென்னிந்தியாவின் வளர்ந்து வரும் இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.

இயக்கம் – N.லிங்குசாமி, இசை – தேவி ்ரீ பிரசாத், ஒளிப்பதிவு  – சுஜித் வாசுதேவ், படத்தொகுப்பு – நவீன் நூலி, சண்டைகாட்சி இயக்குநர்கள் – அன்பறிவ் & விஜய், கலை இயக்கம் – DY சத்ய நாராயணா, எழுத்தாளர்கள் – புர்ரா சாய் மாதவ் & பிருந்தா சாரதி, பாடலாசிரியர் – விவேக் & ்ரீமனி, நடன  இயக்கம் – சேகர், ஜானி & சதீஷ் கிருஷ்ணன், மக்கள் தொடர்பு – டி ஒன், சுரேஷ் சந்திரா, ரேகா, தயாரிப்பு நிறுவனம் – ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன், தயாரிப்பாளர் – ்ரீனிவாசா சிட்தூரி, வழங்குபவர் – பவன் குமார், தமிழ் நாடு வெளியீடு – மாஸ்டர் பீஸ்.

இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு சிறப்புப் பாடலான ‘புல்லட்’ என்ற பாடலை கோலிவுட் முன்ணனி நடிகரான சிம்பு பாடியுள்ளார். இந்த மாஸ் பாடல் படத்தின் முக்கியமான ஒன்றாக இருக்கும்.

இந்தப் பாடலின் லிரிகல் வீடியோ வெளியீட்டு  விழா திரை பிரபலங்கள், படக் குழுவினர் கலந்து கொள்ள, பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் சென்னையில் நேற்று மாலை வேளச்சேரி பீனீக்ஸ் மால் தியேட்டரில் நடைபெற்றது.  

இந்த விழாவில் நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு அந்த பாடலை வெளியிட்டார்.

தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, “ஒரு படத்தில் லிரிக் வீடியோ வெளியீடு இவ்வளவு பெரிதாக நடந்து நான் பார்த்ததில்லை. இத்தனை பெரிய விழா படத்தின் வெற்றியை இப்போதே உறுதி செய்துவிட்டது.  

இந்த வாரியர்’ என்னும் தலைப்பு இயக்குநர் லிங்குசாமியின்  குணத்திற்கு மிகவும் பொருந்தும். கோவிட் காலத்தில் யாரும் வெளியே வரவே பயந்த நேரத்தில், வெளியே வந்து அவரது  சொந்த முயற்சியில் பல உதவிகளைச் செய்தார். அவர் மிக நல்ல மனிதர்.  அவரும் நானும் 10 ஆண்டுகள் முன்பாக சேர்ந்து படம் செய்வதாக இருந்தோம். விரைவில் ரெட் ஜெயண்டில் நாம்  படம் செய்யலாம் சார்.  

நடிகர் ராமை பார்த்த  சிறிது நேரத்தில் இருவரும்  நண்பர்களாகிவிட்டோம். அவர்  நன்றாக தமிழ் பேசுகிறார். அவருக்கு எனது வாழ்த்துக்கள், கீர்த்தி அழகாக இருக்கிறார். படம் போட்டு காட்டுங்கள் என்றேன். “படத்தை வாங்கிங்குங்க..” என்றார்கள். “இப்பவே என்னை திட்டுகிறார்கள்.. இந்தப் படத்தை வாங்க மாட்டேன்…” என்றேன். பாடல் மிக நன்றாக இருக்கிறது. படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்..” என்றார்.

 
Our Score