full screen background image

‘ஐ’ படத்தின் ஷூட்டிங் வெற்றிகரமாக முடிவுற்றது..!

‘ஐ’ படத்தின் ஷூட்டிங் வெற்றிகரமாக முடிவுற்றது..!

கடந்த இரண்டரை ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்த ஐ படத்தின் ஷூட்டிங் நேற்று முன்தினம் வெற்றிகரமாக முடிவடைந்தது.

பிரசாத் ஸ்டூடியோவில் போடப்பட்டிருந்த பிரமாண்டமான செட்டில் எமிஜாக்சன், விக்ரம் ஆடிய நடனக் காட்சியின் இறுதிப் பகுதியுடன் ஷூட்டிங் முடிந்ததாம்.

இந்த நிகழ்ச்சியை ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே கேக் வெட்டி கொண்டாடியிருக்கிறது ஐ படத்தின் டீம்.

I-Shooting-cake

இந்தப் படம் தீபாவளிக்கு வருவதாகச் சொல்லப்பட்டிருந்தாலும் வருமா என்பது சந்தேகம்தான்.. ஏனெனில் தீபாவளிக்குஇன்னமும் ஒரு மாதம்தா்ன் இருக்கிறது. அதற்குள்ளாக இப்படத்தின் போஸ்ட் புரொடெக்சன் வேலைகள் முழுமையாக நடைபெற்று முடியுமா என்பது சந்தேகம்தான் என்கிறார்கள் படக் குழுவினர்.

ஒருவேளை தீபாவளிக்கு ஐ படம் மிஸ்ஸானால் வரும் நவம்பரில் ரிலீஸாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  ‘ஐ’ படத்தின் டீஸர் இதுவரையில் இல்லாத அளவுக்கு 60 லட்சம் பேரால் பார்க்கப்பட்டிருக்கிறது என்பதே இப்படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது..!

Our Score