full screen background image

“இந்த வழக்கில் நான் மாட்டியது மஞ்சு வாரியர் செய்த சதியால்தான்..!” – நடிகர் திலீப் சுப்ரீம் கோர்ட்டில் மனு..!

“இந்த வழக்கில் நான் மாட்டியது மஞ்சு வாரியர் செய்த சதியால்தான்..!” – நடிகர் திலீப் சுப்ரீம் கோர்ட்டில் மனு..!

“தன் முன்னாள் மனைவியான மஞ்சு வாரியர் போலீஸ் உயர் அதிகாரியுடன் சேர்ந்து செய்த சதியால்தான் நடிகை கடத்தப்பட்ட வழக்கில் தன்னை சிக்க வைத்துள்ளனர்” என்று நடிகர் திலீப் தெரிவித்துள்ளார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகையொருவர் கடந்த 2017-ம் ஆண்டு கேரளாவில் நள்ளிரவில் வேன் ஒன்றில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானார்.

இந்த வழக்கில் பிரபல மலையாள நடிகரான திலீப்பும் குற்றம் செய்யத் தூண்டிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு 83 நாட்கள் சிறையில் இருந்து தற்போது ஜாமீனில் வெளியில் வந்துள்ளார்.

இந்த வழக்கு கடந்த 5 வருடங்காளாக கேரளாவில் எர்ணாகுளத்தில் இருக்கும் சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தினமும் ஒரு திருப்பம் நிகழ்கிறது. இரு தரப்புக்கும் ஆதரவாகவும் எதிராகவும் பேசுவதும் வாடிக்கையாகிவிட்டது.

இந்த நிலையில் சாட்சிகளை குலைத்ததாக நடிகர் திலீப் மீது காவல்துறை மற்றொரு வழக்கை சமீபத்தில் பதிவு செய்துள்ளது.  

இந்தப் பரபரப்பான சூழலில் இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார் நடிகர் திலீப்.

அதில், “மலையாள சினிமாவின் சக்தி வாய்ந்த ஒரு பிரிவினரால் தனிப்பட்ட பழி வாங்கல் எண்ணத்தின் காரணமாகவும், மற்றும் தொழில் போட்டி காரணமாகவும் என் மீதான இந்த வழக்கில் பொய்யான புகார் புனையப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார் திலீப்.

மேலும், “என் முன்னாள் மனைவி மஞ்சு வாரியருக்கும், கேரள காவல்துறையில் டி.ஜி.பி. அந்தஸ்தில் உள்ள உயர் போலீஸ் அதிகாரி ஒருவருக்கும் தொடர்பு உள்ளது. இதன் விளைவாகத்தான் நான் இந்த வழக்கில் சிக்க வைக்கப்பட்டேன்..” என்றும் குற்றம் சுமத்தியுள்ளார்.

Our Score