‘பில்லா-2’ படத்தில் அஜீத்துடன் நடிக்கும் வாய்ப்பை நழுவவிட்ட ஹூமா குரேஷி..!

‘பில்லா-2’ படத்தில் அஜீத்துடன் நடிக்கும் வாய்ப்பை நழுவவிட்ட ஹூமா குரேஷி..!

அஜீத்தின் ‘வலிமை’ படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி.

ஹூமா இதற்கு முன்பு ‘காலா’ படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இது இவர் நடிக்கும் இரண்டாவது தமிழ்ப் படம்.

‘வலிமை’ படத்தில் அஜீத்தின் போலீஸ் டீமில் இருக்கும் ஒரு அதிகாரியாக நடித்திருக்கிறாராம் ஹூமா. அஜீத்தின் தோற்றத்திற்கேற்றவாறு அதே உடை, எடை, கம்பீரத் தோற்றம் இருப்பது ஹூமாவுக்கு பிளஸ் பாயிண்ட்டாக இருந்திருக்கிறது. அதனால்தான் ‘வலிமை’ படத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டாராம் ஹூமா.

ஆனாலும், இதற்கு முன்பேயே அஜீத்துடன் ஜோடி சேர்ந்திருக்க வேண்டியதை ஜஸ்ட் மிஸ்ஸாக கை நழுவ விட்டிருக்கிறார் ஹூமா.

அஜீத் நடித்த ‘பில்லா-2’ படத்தில் நாயகியாக நடிக்க அதன் இயக்குநரான சக்ரி டோலட்டி இந்தியா முழுவதும் வலைவீசித் தேடியிருக்கிறார். கிட்டத்தட்ட 700 பெண்களைப் பார்த்தும் யாரும் சரியாக பொருந்தவில்லை.

அந்த நேரத்தில்தான் ஹூமா அறிமுகமான ‘கேங்க்ஸ் ஆஃப் வாஸிபர்’ வெப் சீரீஸ் வெளியானது. அதைப் பார்த்த இயக்குநர் சக்ரி டோலட்டிக்கு ஹூமாவைப் பிடித்துப் போக அவரையே ‘பில்லா-2’ படத்துக்காக புக் செய்திருக்கிறார்.

ஆனால் ‘பில்லா-2’ படத்தைத் திட்டமிட்டபடி துவக்க முடியாமல் போனதால் தொடர்ந்து ஹூமாவால் ‘பில்லா-2’ படத்தி்ல நடிக்க முடியாமல் போனதாம்.

அதற்கு வட்டியும், முதலுமாக சேர்த்துதான் இந்த ‘வலிமை’ படத்தில் அஜீத்துடன் டூயட் பாடியிருக்கிறார் ஹூமா குரேஷி.

Our Score