பிரிட்டிஷ் இசைக் கலைஞர்கள் பணியாற்றிய ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம்

பிரிட்டிஷ் இசைக் கலைஞர்கள் பணியாற்றிய ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம்

இந்திய அளவில் அனைத்து சினிமா ரசிகர்களும், ‘ரகிட ரகிட’ மெட்டை இசைத்தவாறு ஜகமே தந்திரம்’ பட வெளியீட்டுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

இப்படத்தில் இருந்து ஏற்கனவே வெளியான ரகிட ரகிட’, ‘புஜ்ஜி’, ‘நேத்து’ ஆகிய பாடல்கள் இந்திய அளவில் பெரும் வரவேற்பை பெற்று, ரசிகர்களின் உள்ளங்களை வென்றுள்ளன.

இந்த அனைத்து புகழும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அவர்களையே சேரும். தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் சந்தோஷ் நாராயணன், ஒவ்வொரு படத்திலும் தனது வித்தியாசமான இசையமைப்பில் பல மாயங்களை நிகழ்த்தி, நம்மை ஆச்சர்யப்படுத்திகொண்டே இருக்கிறார்.

ஜகமே தந்திரம்’ போன்ற படைப்பில் அளவிலா சுதந்திரமும், படைப்பிற்கான நேரமும் கிடைத்தபடியால், அற்புதமான மாயங்களை நிகழ்த்தி ரசிகர்களை திணறடித்திருக்கிறார்.

இப்படத்தின் இசைப் பணிகள் குறித்து சந்தோஷ் நாராயணன் பேசும்போது, “இப்படத்தின் இசைப் பணிகளுக்காக எனக்கு மிகப் பெரிய அளவில் நேரம் கிடைத்தது. இது உலக அளவில் பயணப்படும் படம் என்பதால் நிறைய மெனக்கெட்டேன்.

ஒரு கலைஞனாக, பலவிதமான எனது புதிய முயற்சிகளுக்கு இப்படத்தில் இடம் கிடைத்ததில் எனக்குப் பெரும் மகிழ்ச்சி.

இந்தப் படத்தின் இசை நம் மக்களுக்கு அந்நியமாக இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். காட்சிகளுக்குத் தேவையான மண்ணின் இசையை, படத்தில் கொண்டு வந்துள்ளோம். மதுரை நாட்டுப் புற இசையையும் இப்படத்தில் முயற்சித்திருக்கிறேன்.

இந்தப் படம் ஒரு வகையில் பிரிட்டிஷ் படைப்பென்றே சொல்லலாம். அதிலும் பிரிட்டிஷ் பேண்ட் குழுவினர் மற்றும் இசை கலைஞர்கள், ஸ்காட்டிஷ் இசை கலைஞர்கள் என உலகம் முழுவதிலிருந்தும் பல திறமையாளர்களுடன் இணைந்து இப்படத்தில் பணி புரிந்திருக்கிறேன்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பிலும், கலந்து கொண்டேன். அதனால் படத்தில் இசை காட்சிகளில் எப்படி பொருந்தும்… எது பொருந்தாது என்கிற தெளிவு இருந்தது. இந்த அனுபவமே புதுமையாக இருந்தது.

 ‘ரகிட ரகிட’ பாடல் முதல்முறையாக எனது ஸ்டூடியோவிற்கு வெளியே பதிவு செய்த பாடல். அந்த பாடலே ஒரு அனுபவத்தின் உணர்வின் வெளிப்பாடுதான். ரசிகர்கள் அந்த அனுபவத்தை உணர வேண்டும் என்று நினைத்தோம். ரசிகர்கள் படத்தை கொண்டாடுவார்கள் என நம்புகிறேன்…” என்றார்.

 
Our Score