விஜய்க்கு வில்லனாக ஹிந்தி நடிகர்..!

விஜய்க்கு வில்லனாக ஹிந்தி நடிகர்..!

ஹீரோயினைகூட புக் பண்ணிரலாம். இந்த வில்லன் கேரக்டருக்குத்தான் கரெக்ட்டா செட்டாக மாட்டேங்குது என்று கமர்ஷியல் பட இயக்குநர்கள் ரொம்பவே கவலைப்படுகிறார்கள்.

பழுத்த அனுபவம் வாய்ந்த வில்லன்களை திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான ஹீரோக்களிடம் அடி வாங்கி பார்த்து அவரது ரசிகர்களுக்கே போரடிக்கிறதாம். அதனால் அந்த ஹீரோவின் ரசிகர்களுக்காக வேறு வேறு வில்லன்களை தேட வேண்டியிருக்கிறது என்கிறார்கள்.

இப்போது புதிதாக பிஸினஸ் என்ற ஒரு விஷயமும் சேர்ந்துள்ளதால் தென்னிந்திய சினிமாவைத் தாண்டி பாலிவுட்டிலும் படம் விளம்பரமே செய்யாமல் ஓட வேண்டுமெனில் பாலிவுட் நடிகர்களும் படத்தில் இருந்தாக வேண்டுமே..?

vijay-ar-murugadoss

‘துப்பாக்கி’ படத்திற்குப் பின்பு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வரும் பெயரிடப்படாத படத்தில் பிரபல ஹிந்தி நடிகர் நீல் நிதின் முகேஷ் வில்லனாக நடிக்கப் போகிறாராம். இதனை இன்றைக்கு தனது டிவிட்டர் பக்கத்தில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.

நீல் நிதின் முகேஷ் 2007-ம் ஆண்டில் இருந்து ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். இதில் Jail, Newyork, Lafangey ParindeyPlayers, 3G, shortcut romeo உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். இதே படத்தில் ஏற்கெனவே பெங்காலியைச் சேர்ந்த தோட்டா ராய் என்பவரும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

ஆக… தமிழ்ச் சினிமாவில் தமிழ் நடிகர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது குதிரைக் கொம்பாகத்தான் இருக்கிறது..! பாவம் ஒரிஜினல் தமிழ் வில்லன் நடிகர்கள்..!

Our Score