சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ படத்தின் டீஸரை வெளியிட்ட சல்மான்கான்

சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ படத்தின் டீஸரை வெளியிட்ட சல்மான்கான்

சமீபத்தில் ‘தபாங்-3’ படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்காக சென்னை வந்த பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான நடிகர் சல்மான்கான் இந்தி பேசும் வட மாநிலங்களில் தமிழ்ப் படங்களுக்கு எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கிறது என்பதை ஆச்சரியமாக பத்திரிகையாளர்களிடத்தில் பகிர்ந்து கொண்டார்.

அப்போது தனது சொந்த ஆர்வத்தின் காரணமாக நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ‘ஹீரோ’ படத்தின் டீசரையும் வெளியிட்டார்.

தனது மைக்ரோ பிளாக்கில் இந்தப் படத்தின் டீசரை வெளியிட்ட நடிகர் சல்மான்கான், ‘ஹீரோ’ படத்தின் ஸ்டைலான அம்சங்களையும் வெகுவாகப் பாராட்டினார்.

இது குறித்து ‘ஹீரோ’ படத்தின் தயாரிப்பாளரான கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் கோட்டபாடி ஜே.ராஜேஷ் பேசும்போது, “இந்தப் படத்திற்கான விளம்பரம் நாங்கள் எதிர்பார்த்ததற்கும் மேலாகக் கிடைத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், படத்தின் டீசரை சல்மான் சாரிடம் காட்ட வேண்டும் என்றுதான் நாங்கள் நினைத்திருந்தோம். ஆனால், படத்தின் டீசரைப் பார்த்து ரசித்த சல்மான்கான் சார், தானாகவே முன் வந்து ‘இதை நானே வெளியிடுகிறேனே’ என்றதுடன் டீஸரில் பங்கு பெற்ற நடிக நடிகையர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் கேட்டறிந்தார்.

சல்மான் சார் தமிழ்த் திரையுலகம் குறித்து எவ்வளவு ஆர்வமாக இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான் என்றாலும், ஹீரோ படம் முழுமையாகப் பூர்த்தியடைந்ததும், தான் அதைப் பார்க்க மிகுந்த ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்தார்.

கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ் நிறுவனத்தைப் பொறுத்தவரை இந்த ஆண்டு டிசம்பர் 20-ம் தேதி என்பது ஒரு மிக முக்கியமான தினமாகும். காரணம், நிறுவனத்தின் சொந்தத் தயாரிப்பான ‘ஹீரோ’ வெளியாகும் அதே தினத்தில், எங்களது நிறுவனம் விநியோகம் செய்யும் ‘தபாங்-3’ படமும் வெளியாகிறது.

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஆக்ஷன் கிங் அர்ஜுன், கல்யாணி ப்ரியதர்ஷன், அபி தியோல் ஆகியோர் பிரதான வேடங்களில் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ‘இரும்புத் திரை’ படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இந்தப் படத்தை இயக்குகிறார்.

‘ஹீரோ’ படத்தின் டீஸர் இங்கே :

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘ஹீரோ’ படத்தின் டீஸர்

Our Score