full screen background image

அனுமோல் நடித்த ‘ஹார்ட் பீட்’ வெப் சீரீஸ் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியானது..!

அனுமோல் நடித்த ‘ஹார்ட் பீட்’ வெப் சீரீஸ் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியானது..!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் ஸ்பெஷல் சீரிஸான ‘ஹார்ட் பீட்’, தற்போது வெளியாகியுள்ளது. 

‘ஏ டெலி பேக்டரி’ நிறுவனம் இந்த சீரிஸை தயாரித்துள்ளது. 

இந்த சீரிஸில் நடிகை அனுமோல், தீபா பாலு, யோகலட்சுமி, தாபா, சாருகேஷ், ராம், சபரேஷ், சர்வா, பதினே குமார், குரு லக்ஷ்மன், ஜெயராவ், கிரி துவாரகேஷ், சந்திரசேகர், தேவிஸ்ரீ, கவிதாலயா கிருஷ்ணன், தியான்ஷ், ரியா, ஸ்மைல் செல்வா மற்றும் சரவணன் ராஜவேல் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

ரெஜிமெல் சூர்யா தாமஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன் இயக்கியுள்ளார். 

ஒரு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களைச் சுற்றி, நடக்கும் பரபரப்பு சம்பவங்கள்தான், இந்த ஹார்ட் பீட் சீரிஸின் கதைக் களமாகும்.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார், மனதைக் கவரும் இந்த சீரிஸை, இன்றைக்கு மார்ச் 8-ம் தேதி, சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டமாக ஸ்ட்ரீம் செய்யத் துவங்கியுள்ளது.

இப்போது இந்த “ஹார்ட் பீட்” சீரிஸை, டிஸ்னி+ ஹாட் ஸ்டார் தளத்தில் கண்டுகளியுங்கள்.

Our Score