full screen background image

ஹரீஷ் கல்யாண்-அதுல்யா ரவி நடிக்கும் புதிய திரைப்படம் துவங்கியது

ஹரீஷ் கல்யாண்-அதுல்யா ரவி நடிக்கும் புதிய திரைப்படம் துவங்கியது

SP CINEMAS நிறுவனம் THIRD EYE ENTERTAINMENT நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் புதிய படம் இன்று துவங்கியது.

இந்தப் படத்தில் ஹரீஷ் கல்யாணும், அதுல்யா ரவியும் ஜோடியாக நடிக்கிறார்கள். நடிகர் யோகிபாபுவும் படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

இசையமைப்பாளர் D.இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ்ரீதர் (‘பரியேறும் பெருமாள்’ படப் புகழ்) ஒளிப்பதிவு செய்கிறார். S.S.முர்த்தி (ஆர்யாவின்  ‘கேப்டன்’ மற்றும்  ஜெயம் ரவியின் ‘டிக் டிக் டிக்’ புகழ்) கலை இயக்குநராக பணியாற்றுகிறார். சுஜித் சுதாகரன் (மோகன்லாலின் ‘லூஸிபர்’ படப் புகழ் ) உடை வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார்.

ஜீவி பிரகாஷ் நடித்த ‘அடங்காதே’ படத்தை இயக்கிய இயக்குநரான சண்முகம் முத்துசாமி இந்தப் படத்தை இயக்குகிறார்.

இப்படம் காதல் ஆக்சன் டிராமா திரைப்படமாக உருவாகவுள்ளது. ஹரிஷ் கல்யாண் முழுக்க, முழுக்க ஒரு ஆக்சன் திரைப்படத்தில்  நடிப்பது இதுவே முதல் முறை, மேலும் அவர் இப்படத்தில் வழக்கத்திற்கு மாறாக முரட்டுத்தனமான தோற்றத்தில் நடிக்கவுள்ளார்.

இத்திரைப்படம் இன்று காலை சென்னையில் எளிமையான சடங்குகளுடன் இனிதே துவங்கியது. இயக்குநர் வெற்றி மாறன் படத்தின் முதல் ஷாட்டுக்கு கேமராவை ஆன் செய்து துவக்கி வைத்தார்.

இந்தத் துவக்க விழாவில் விஜய் சேதுபதி, ஜீ.வி.பிரகாஷ், ஐஷ்வர்யா ராஜேஷ், இயக்குநர் சாம் ஆண்டன், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், ரெக்க’ மற்றும் ‘வா டீல்’ படப் புகழ் இயக்குநர் ரத்ன சிவா, ‘எங்கிட்ட மோதாதே’ படப் புகழ் ராமு செல்லப்பா ‘டோரா’ படப் புகழ் இயக்குநர் தாஸ் ராமசாமி உட்பட பல திரை பிரபலங்கள் கலந்து கொண்டு படம் வெற்றி பெற படக் குழுவினரை வாழ்த்தினார்கள்.

வடசென்னையை மையமாக வைத்து உருவாக்கப்படவுள்ள இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு, வட சென்னை பகுதிகளிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் நடைபெறவுள்ளது.

படத்தின் படப்பிடிப்பு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பிறகு துவங்கவுள்ளது.

Our Score