ராகவா லாரன்ஸ் நடிக்கும் புதிய திரைப்படம் ‘ருத்ரன்’

ராகவா லாரன்ஸ் நடிக்கும் புதிய திரைப்படம் ‘ருத்ரன்’

நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் புதிய படத்தை பைவ் ஸ்டார் நிறுவனத்தின் தயாரிப்பாளரான கதிரேசன் தயாரிக்கவுள்ளார்.

நடிகர் ராகவா லாரன்ஸ் ஹிந்தியில் இயக்கியிருக்கும் ‘லட்சுமி பாம்’ என்ற திரைப்படம் வரும் தீபாவளி தினத்தன்று ஓடிடியில் வெளியாகவுள்ளது. இதையடுத்து தமிழில் ஒரு படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டிருக்கிறார் ராகவா லாரன்ஸ்.

இந்த படத்திற்கு 'ருத்ரன்’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.  இந்தப் படத்தை பைவ் ஸ்டார் நிறுவனத்தின் தயாரிப்பாளரான கதிரேசன் தயாரிக்கவுள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இந்தப் படத்தை அறிமுக இயக்குநரான செல்வா இயக்கவுள்ளார்.

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது.  பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்க்கும்போது இதுவொரு திகில் கதையம்சம் கொண்ட படமாக இருக்கும் என கருதப்படுகிறது.

இந்த படத்தில் நடிக்கும் மற்றைய நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் பற்றிய தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.