கலைப்புலி S.தாணு வெளியிடும் பிரம்மாண்டமான திரைப்படம் ‘குருஷேத்திரம்’

கலைப்புலி S.தாணு வெளியிடும் பிரம்மாண்டமான திரைப்படம் ‘குருஷேத்திரம்’

இந்தியாவின் மாபெரும் இதிகாசங்களில் ஒன்றான ‘மஹாபாரதம்’ கௌரவர்கள் மற்றும் பாண்டவர்களின் கதையைச் சொல்கிறது. இந்தக் கதையில் 18 நாட்கள் நடைபெறும் ‘குருஷேத்திரா’ என்ற இடத்தில் நடக்கும் யுத்தம்தான் மிக முக்கியமானது. இந்தப் போரில்தான் கவுரவர்கள் அனைவரும் பாண்டவர்களால் கொல்லப்படுவார்கள்.

தற்போது இந்தக் ‘குருஷேத்திரா’ போரினை மட்டும் மையமாக கொண்டு மிகப் பெரிய பொருட் செலவில் ‘குருஷேத்திரம்’ என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. 3-D முறையில் உருவாகியுள்ள இந்த படத்தை விருஷபாத்ரி புரொடக்ஷன் நிறுவனத்தின் சார்பில் பிரபல கன்னட தயாரிப்பாளர் முனிரத்னம் தயாரித்துள்ளார்.  

இந்தப் பிரம்மாண்டமான  படைப்பு தமிழ், தெலுங்கு, ஹிந்தி,  கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளிலும் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தப் படத்தில் ‘பீஷ்மர்’ வேடத்தில் அம்பரிஷ்,  ‘துரியோதனன்’ வேடத்தில் தர்ஷன், ‘கர்ணன்’ வேடத்தில் அர்ஜுன்  சார்ஜா, ‘கிருஷ்ணர்’ வேடத்தில் வி.ரவிச்சந்தர், ‘அர்ஜுனன்’ வேடத்தில் சோனு சூட், ‘திருதராஷ்டிரன்’ வேடத்தில் ஸ்ரீநாத், ‘தர்மராக’ சசிகுமார், ‘பீமனாக’ அக்தர் சாயிப், ‘நகுலனாக’ யாஷாஸ் சூர்யா, ‘சகாதேவனாக’ சந்தன், ‘குந்தி’யாக பாரதி விஷ்ணுவர்த்தன், ‘பானுமதி’யாக மேக்னா ராஜ், ‘உத்தரை’யாக அதிதி ஆர்யா, ‘துச்சாதனானாக’ துஷ்கன்ஸா, ‘காந்தாரி’ வேடத்தில் பவித்ரா லோகேஷ், ‘சகுனி’ வேடத்தில் ரவிஷங்கர், ‘திரௌபதி’ வேடத்தில் ஸ்நேகா, ‘அபிமன்யு’ வேடத்தில் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகனான நிகில் கவுடாவும் நடித்துள்ளனர்.

மேலும் ஹரிபிரியா, பிரக்யா ஜெய்ஸ்வால், அனுசுயா பரத்வாஜ், ரம்யா நம்பீசன் என்று மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில்  நடித்துள்ளது.

இந்த மாபெரும் இதிகாசத் திரைப்படத்திற்கு  ஹரி கிருஷ்ணா இசையமைத்துள்ளார். ஐெய் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜோ.நி. ஹர்ஷா படத் தொகுப்பு செய்துள்ளார். திரைக்கதையை ஜே.கே.பாரவி எழுதியுள்ளார். தயாரிப்பு வடிவமைப்பு – நர ஜெயதேவி, கிராபிக்ஸ் – துர்கா பிரசாத், கலை இயக்கம் – கிரண் குமார் மானே, சண்டை இயக்கம் – சாலமன்,

மிகப் பெரும் பொருட்  செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை  கர்நாடக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும், தயாரிப்பாளருமான முனிரத்னம் கதை எழுதி, தயாரித்துள்ளார். பிரபல கன்னட இயக்குநர் நாகண்ணா இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

இந்தப் படத்தை தமிழில் வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி S.தாணு  வெளியிடுகிறார். வரும் ஆகஸ்ட் மாதம் இந்தப் படம் திரைக்கு வரவுள்ளது.

Our Score