குரு கமலம் அசோசியேட்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக R. குமுதவள்ளி தயாரிக்கும் “குரு சுக்ரன்” படம் இன்று காலை ஏவி.எம். ஸ்டூடியோவில் பூஜையுடன் துவங்கியது..
இந்த படத்தில் குரு, கமல்நாத் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். இவர்கள் இருவரும் இரட்டையர்களாகப் பிறந்தவர்கள். கதாநாயகியாக சாத்னா டைடஸ் என்ற புதுமுகம் நடிக்கிறார். மற்றும் சிங்கமுத்து, சண்முகராஜன், ‘ஆடுகளம்’ நரேன், அருள்மணி, சென்றாயன், சுதா சந்திரன், ஸ்ரீரஞ்சனி, ‘கருத்தம்மா’ ராஜஸ்ரீ, ‘அவன் இவன்’ ராமராஜன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – செல்லத்துரை
இசை – சந்தோஷ் சந்திரபோஸ்
பாடல்கள் – வைரமுத்து
கலை – ஜான் பிரிட்டோ
நடனம் – தினா, ரமேஷ் ரெட்டி
ஸ்டண்ட் – மிரட்டல் செல்வா
தயாரிப்பு – R.குமுதவள்ளி
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் B.ஆனந்த். இவர் சமீபத்தில் வெளியான ‘மௌன மழை’ படத்தை இயக்கியவர்.
“ஒரு குடும்பத்தில் நடக்கும் பாசம், காதல், மோதல் எல்லாவற்றையும் திரைக்கதையாக்கி இருக்கிறோம். படபிடிப்பு குற்றாலம், தென்காசி, அம்பாசமுத்திரம், செங்கோட்டை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இந்த வருடக் கடைசியில் படம் வெளியாகும்..” என்றார் இயக்குனர்.