‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குநர் கௌதம் மேனன், நடிகர் சிம்புவின் நடிப்பில் ஏற்கெனவே இயக்கி பாதியில் விட்டிருந்த திரைப்படத்தின் படப்பிடிப்பை மீண்டும் துவக்கியிருக்கிறார்.
‘விண்ணை தாண்டி வருவாயா‘ படத்தின் மகத்தான வெற்றிக்கு பிறகு சிம்பு, A.R. ரகுமான், கௌதம் மேனன் இணையும் இந்த படத்தின் மீதுள்ள எதிர்பாப்பு மிக அதிகம். தற்போது கௌதம் மேனன் இந்தப் படத்தின் தலைப்பை அறிவித்து உள்ளார்.
‘அச்சம் என்பது மடமையடா’ என பெயரிடப்பட்டுள்ள இந்த தலைப்பே படத்தின் கதைக்கேற்ப தலைப்பு என அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே மூன்று பாடல்கள் பதிவாகி உள்ள நிலையில், இந்த ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் படப்பிடிப்பு மார்ச் முதல் வாரத்தில் துவங்கவுள்ளது.









