full screen background image

யூத் லுக்கில் காமெடி கிங் கவுண்டமணி

யூத் லுக்கில் காமெடி கிங் கவுண்டமணி

’49-ஓ’, ‘வாய்மை’ ஆகிய படங்களுக்கு அடுத்து நகைச்சுவை கிங் கவுண்டமணி நடிக்கும் புதிய படம் ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’.

சென்னையில் இருந்து மதுரைக்கு செல்லும் பயணத்தில் ஏற்படும் சம்பவங்கள்தான் படத்தின் கதையாம்.

இந்தப் படத்தை சுசீந்திரனிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய கணபதி பாலா இயக்கவுள்ளார். கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். சண்முகம் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில் இன்றைய யூத் நடிகர்களுக்கெல்லாம் போட்டியாக யூத் ஸ்டைலில் நடிக்கவுள்ளாராம் கவுண்டமணி. அதற்காக போட்டோஷூட்டெல்லாம் எடுக்கப்பட்டுள்ளது.

goundamani-4 

இந்தப் படத்தின் டைட்டில் பாடலுக்காக 16 விதமான டியூன்கள் போடப்பட்டு இது அத்தனைக்கும் விதவிதமான உடைகள் மற்றும் மேக்கப்பில் கவுண்டமணி நடிக்கப் போகிறாராம்.

அதோடு கவுண்டமணியின் புகழ் பெற்ற பல பன்ச் டயலாக்குகள் இடம்பெறும்வகையில் ஒரு பாடலும் படத்தில் இடம் பெறவிருக்கிறது.

அடுத்த மாதம் 1-ம் தேதி படத்தின் ஷூட்டிங் துவங்கவுள்ளதாம். 

Our Score