வருங்கால கணவர் தயாரிக்கும் புதிய படத்தில் ஹீரோயின் திரிஷாதான்..!

வருங்கால கணவர் தயாரிக்கும் புதிய படத்தில் ஹீரோயின் திரிஷாதான்..!

இதோ திரிஷாவுக்கு கல்யாணம்.. பீல்டு அவுட் ஆகப் போறாரு என்று நினைத்துக் கொண்டிருக்கும், முதிர் கன்னி நடிகைகளுக்கு மறுபடியும் பீதியை கொடுத்திருக்கிறார் திரிஷா.

அவருடைய வருங்கால கணவர் வருண் மணியனின் ரேடியன்ஸ் மீடியா தயாரிக்கவிருக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்கப் போகிறாராம். இதில் ஹீரோவாக ஜெய் நடிக்கவிருக்கிறார். ‘சமர்’ படத்தின் இயக்குநர் திரு இப்படத்தை இயக்கவுள்ளார்.

சமீபத்தில் வெளியான ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் திரிஷாவை பார்த்தவர்கள் “ஏன் இவ்ளோ சீக்கிரம் ரிட்டையர்டாகணும்..?” என்று போல்டாக கேள்வி மேல் கேள்வி கேட்டிருக்கிறார்கள். இந்த அழகுக்கு இன்னும் ஒரு 25 படங்களில் நடிக்கலாமே என்று இரவு நேர பார்ட்டிகளிலும் நண்பிகளும், நண்பர்களும் கேட்டபடியிருக்க திரிஷாவால் இப்போதைக்கு இதிலிருந்து தப்பிக்க முடியாது என்பதை உணர்ந்திருக்கிறார். திருமணமானாலும் மீண்டும் நடிப்பு என்பதிலும் உறுதிதானாம்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் திரிஷாவுக்கு கும்பகோணத்தைச் சேர்ந்த கிராமத்தில் இருக்கும் நாகரிகப் பெண் கேரக்டராம்.  தமன் இந்தப் படத்திற்கு இசையமைக்கவுள்ளார். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். ரூபன் எடிட்டிங் செய்ய, ஜாக்கி கலை இயக்கம் செய்கிறார். நிரஞ்சனி காஸ்ட்யூம்ஸ் கவனிக்கவுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் சென்னை மற்றும கும்பகோணத்தில் நடைபெறவுள்ளது.

Our Score