நடிகை அனுஷ்கா நடிக்கும் ‘ராணி ருத்ரமாதேவி’ படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தின் புறநகர் பகுதியான நானக்ராம்கூடா என்ற பகுதியில் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது.
இந்த படம் ‘காக்தியா அரசர்’ பற்றிய படம் என்பதால் இதில் நடிக்கும் நடிகர்கள் அதிக அளவு நகைகளை பயன்படுத்தி வருகிறார்கள். இதில் அனுஷ்கா அணியும் நகைகளெல்லாம் உண்மையான தங்க நகைகளாம். பல கோடி மதிப்புள்ள நகைகளை அணிவதால் படப்பிடிப்புத் தளத்தில் பலத்த செக்யூரிட்டி ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது..
இந்தப் படத்தின் ஒரு முக்கிய காட்சிக்காக ஒன்றரை கிலோ தங்க நகைகள் பெங்களூரில் இருந்து வரவழைக்கப்பட்டிருந்தன. அந்த நகைகள் கடந்த சில நாட்களாக படப்பிடிப்புக்கு பயன்படுத்தப்பட்டும் வந்திருக்கின்றன.
இந்த நிலையில் நேற்று காலை படப்பிடிப்பு நடந்து படக்குழுவினர் மதிய உணவுக்காக சாப்பிடச் சென்றுள்ளனர். அப்போது ரோல்டு கோல்டு மற்றும் தங்க நகைகள் இரண்டு சூட்கேசில் வைக்கப்பட்டு இருந்தன. இதில் ஒரிஜினல் தங்க நகைகள் இருந்த சூட்கேஸ் சிறிது நேரத்தில் காணாமல் போய்விட்டதாம்.
இதுபற்றி தெரிய வந்ததும் அப்போது படப்பிடிப்பு தளத்தில் இருந்த 150 பேரிடம் படக் குழுவினர் விசாரித்துள்ளனர். ஆனால் யாரும் தங்க நகைகள் பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என கூறியுள்ளனர்.
வேறு வழியில்லாமல் படத்தின் தயாரிப்பாளர் குணசேகரன் ராயதுர்க்கம் தங்க நகைகள் காணாமல் போனது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசாரும் விசாரித்து வருகிறார்களாம்.
ருத்ரம்மா தேவிக்கு வந்த சோதனை..!