full screen background image

‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் தனுஷ் பேசும் நீள…………………………………………மான வசனம்..!

‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் தனுஷ் பேசும் நீள…………………………………………மான வசனம்..!

‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் நடிப்பும், இயக்கமும், கூடவே வசனமும்  பிரமாதமாக இருக்கிறது..!

ஒருவன் பொறியாளனாக உருவாகுவதற்கு எத்தனை எத்தனை கஷ்டங்கள் பட வேண்டியிருக்கிறது என்பதை தனுஷ் ஒரு ஷாட்டில் தொடர்ச்சியாக வசனம் பேசி நடித்திருக்கிறார். இது படத்தில் மிக முக்கியமான இடத்தில் வருகிறது.

வில்லன் தனுஷை தேடி வந்து அவரிடம் “கொடுக்குற காசை வாங்கிட்டு ஒழுங்கா திரும்ப ஓடிப் போயிரு…” என்கிறான். அப்போது தனுஷ் வைக்கும் பொங்கல்தான் இந்த நீளமான டயலாக்..!

இனி வரும் காலங்களில் தனுஷின் கேரியரை குறிப்பிடும் வீடியோக்களில் நிச்சயமாக இந்தக் காட்சியும் இடம் பிடிக்கும் என்பதில் நமக்கு சந்தேகமில்லை..!

அந்தக் காட்சியில் தனுஷ் மூச்சுவிடாமல் ஒரே ஷாட்டில் பேசியிருக்கும் வசனம் இதுதான் :

”அப்பா, அம்மா கஷ்டப்பட்டு  டொனேஷன் கட்டி எல்கேஜில இருந்து பத்தாவது வரைக்கும் பெயிலாகாம படிச்சி.. பதினொன்னாவதுல ஈஸியான குரூப்பையெல்லாம் விட்டுட்டு இந்த குரூப் எடுத்தாதான் என்ஜீனியராக முடியும்ன்னு கஷ்டமான குரூப்பை எடுத்து, பிஸிக்ஸுக்கு ஒரு டியூசன், கெமிஸ்ட்ரிக்கு ஒரு டியூசன், மேத்ஸுக்கு ஒரு டியூசன்ன்னு ரோடு ரோடா அலைஞ்சு.. பப்ளிக் எக்ஸாம்ல பசங்க நைட் எல்லாம் பிளாஸ்க்ல டீ வச்சி, படிச்சி, காலைல அலாரம் வச்சி எந்திருச்சு, படிச்சு, அதுல வாங்குன மார்க்கெல்லாம் பத்தாம, TNPC Examக்குன்னு வேற தனியா ரெண்டு மாசம் உக்காந்து, படிச்சி, அதுல வாங்குன கட் ஆஃப் மார்க் பத்தாம போய்.. மேனேஜ்மெண்ட் கோட்டால சீட் கேட்டு… fees கட்ட அம்மா நகைய அடமானம் வச்சு காலேஜ்ல சீட் வாங்கி பர்ஸ்ட் இயர்ல இருந்து போர்த் இயர்வரைக்கும் உள்ள எல்லா அரியர்ஸையும் போர்த் இயர்ல மொத்தமா கிளியர் பண்ணி, கேம்பஸ் இண்டர்வியூ போயும் வேலை இல்லன்னு தெரிஞ்சு, செருப்பால அடிச்சு, ரோடு ரோடா வேலை தேடி அலஞ்சு, மூணு வருஷம் நாலு வருஷம் வீட்டுல தண்டமா உக்காந்து, அப்பா என்ன தண்டச்சோறு, தண்டச்சோறு-ன்னு திட்டும்போது, சாப்புடுற ஒவ்வொரு சாப்பாடும் தொண்டல சிக்கி, சிக்கி, வலிச்சு, வலிச்சு இறங்கி, எவனோ ஒரு புண்ணியவான் கடைசில ஒரு நல்ல மனுசன்னு நினைச்சு வேல குடுத்தா, அதையும் புடுங்க நினைக்கற உன்னமாரி ஒரு பொறம்போக்கையெல்லாம் சமாளிச்சு, இங்க உன் முன்னாடி நின்னு பேசிட்டிருக்கேன்..!”

Our Score