full screen background image

“கவுதம் கார்த்திக் மாதிரி ஒரு ஹீரோவை பார்க்கவே முடியாது” – தயாரிப்பாளரின் பாராட்டு..!

“கவுதம் கார்த்திக் மாதிரி ஒரு ஹீரோவை பார்க்கவே முடியாது” – தயாரிப்பாளரின் பாராட்டு..!

கௌதம் கார்த்திக், சேரன் இணைந்து நடிக்கும், ஆனந்தம் விளையாடும் வீடு’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது..!

இயக்குநர் நந்தா பெரியசாமி எழுதி, இயக்கும் இப்படத்தினை ஶ்ரீவாரி ஃபிலிம் சார்பில் தயாரிப்பாளர் P.ரங்கநாதன் தயாரித்துள்ளார்.

கெளதம் கார்த்திக் நாயகனாக நடித்திருக்கிறார். ஷிவத்மிகா  ராஜசேகர் நாயகி பாத்திரத்தில் நடிக்கிறார். இயக்குநர், நடிகர் சேரன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் சரவணன், டேனியல் பாலாஜி, வெண்பா, மொட்டை ராஜேந்திரன், விக்னேஷ், சிங்கம் புலி, கும்கி ஜோ மல்லூரி, பாடலாசிரியர் சினேகன், நமோ நாராயணன்,  சௌந்தராஜன், மௌனிகா, மைனா, பருத்தி வீரன்’ சுஜாதா, பிரியங்கா, ‘நக்கலைட்ஸ்’ தனம் என பெரிய நடச்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர்.

இக்காலத்தில் அரிதாக நிகழும் குடும்பங்களை மையமாக வைத்து, அழகான கதையினை உருவாக்கியுள்ளார் இயக்குநர் நந்தா பெரியசாமி. 

தற்போது இப்படத்தின் முழுப் படப்பிடிப்பும் முடிந்ததை, படக் குழுவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

்ரீ வாரி ஃபிலிம் சார்பில் தயாரிப்பாளர் P.ரங்கநாதன் கூறியதாவது, ஆனந்தம் விளையாடும் வீடு’ படம், பல ஆண்டுகளுக்கு பிறகு,  எனது வாழ்வில் எனக்கு மிகவும் நெருக்கமான, சிறப்பான படமாக அமைந்தது.

இந்தப் படத்தில்  மிகப் பெரிய நட்சத்திர கூட்டம் பங்கேற்றுள்ளனர். நடிகர் கௌதம் கார்த்திக் இப்படத்தில், எனக்கு பெரிதும் உறுதுணையாக இருந்து, மிக அர்ப்பணிப்புடன் படத்தை முடித்துக் கொடுத்தார். அவரது நடிப்பு, பொறுமை, இவை மட்டுமல்லாமல் படப்பிடிப்பில் ஏற்ற இறக்கம் காட்டாமல் அனைவரிடமும் ஒரே மாதிரியாக, மரியாதையுடன் நடந்து கொண்டது, எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சமீப காலமாக உள்ள நடிகர்களில் இந்த மாதிரியான குணத்தை, இவரை தவிர வேறு எந்த நடிகரிடமும் நான் கண்டதில்லை. இந்த குணம் அவரை  புகழின் உச்சிக்கு கொண்டு போகும்.

நடிகர், இயக்குநர் சேரன் அவர்களின் பங்கேற்பு இந்தப் படத்தினை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளது. இந்தப் படத்தில் அவரது நடிப்பு மிகவும் பிரமாண்டமாக அமைந்திருக்கிறது. இவரது கதாபாத்திரம், ரசிகர்கள் மத்தியில் கண்டிப்பாக தனி இடம் பிடிக்கும்.

நடிகை ஷிவத்மிகா ராஜசேகர் பார்க்க பக்கத்து வீட்டு பெண்ணை போலவே உள்ளார்.  அவரது இயல்பான நடிப்பு, இந்த படத்தில் பெரிதும் பேசப்படும்.

40-க்கும் மேற்பட்ட நட்சத்திர பட்டாளத்தை ஒன்றிணைத்து, இந்தப் படத்தை உருவாக்க, பெரிதும் உதவிய இயக்குநர் நந்தா பெரியசாமிக்கு நான் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன். அவரின் உதவியால்தான் இந்தப் படத்தை இவ்வளவு விரைவில் முடிக்க முடிந்தது…” என்றார்.

ஆனந்தம் விளையாடும் வீடு’ படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், படத்தின் டிரெய்லர், இசை மற்றும் திரை வெளியீடு குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவுப்புகள் வெளியாகும்.

 
Our Score