‘ஏமாறே; ஏமாற்றாதே’ என்பது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ.. நிச்சயம் சினிமாவில் போலிகளை நம்பி தங்களது வாழ்க்கையையும், பணத்தையும் இழந்து நிற்கும் இளம் வாலிபர்களுக்கும், பெண்களுக்கும் பொருந்தும்.
இந்தக் கருத்தை மையமாகக் கொண்டு சினிமாவில் இருக்கும் போலியான மனிதர்களின் முகமூடியைக் கிழிக்கும் படமாக உருவாகியிருக்கிறது இந்த ‘காந்தேஷ்வர்’ திரைப்படம்.
இதில் சிரில், சித்ரலேகா, நாராயணன், காயத்ரி ஆகியோர் ஹீரோ, ஹீரோயின்களாக அறிமுகமாகின்றனர். இவர்களுடன் போண்டா மணி, நெல்லை சிவா ஆகியோர்மும் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு – சாஜ்குமார், இசை – ராஜேஷ் ராமலிங்கம், நடனம் – சிவசங்கர், சண்டை பயிற்சி – தளபதி தினேஷ், எழுத்து, இயக்கம் – பாலமுருகன்.
“போலி இயக்குநரை சந்தித்து நடிக்க சான்ஸ் கேட்கிறார் ஒரு இளம் பெண். அந்த இயக்குநரும் அதற்கு சம்மதித்து அந்தப் பெண்ணை ஹீரோயினாக்குவதாக சொல்கிறார். உடனே அந்தப் பெண்ணும் சினிமா ஹீரோயின் கனவில் மிதக்கிறாள். ஆனால் இயக்குநரின் எண்ணமோ வேறு மாதிரியாக இரகுக்கிறது. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அந்த இளம் பெண் ஒரு முடிவெடுக்கிறாள்.. அது என்ன என்பதுதான் சஸ்பென்ஸ்..” என்கிறார் இயக்குநர்.
இந்தப் படத்திற்காக ‘என்னுயிரும் நீதான்; உன்னியிரும் நான்தான்’ என்ற கனவுப் பாடல் கொடைக்கானலில் ஏரி மற்றும் பூம்பாறை பகுதிகளில் படமாக்கப்பட்டது..