full screen background image

’கிரிமினல்’ படத்தின் போஸ்டரை வெளியிட்டார் ஜி.வி.பிரகாஷ் குமார்

’கிரிமினல்’ படத்தின் போஸ்டரை வெளியிட்டார் ஜி.வி.பிரகாஷ் குமார்

கமலா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் பான் இந்தியா திரைப்படம் ‘கிரிமினல்’.

சி.பி.மகேஷ் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ஜானவி, ஃபெஸி, அரவிந்த் M.N., விஜய் பீட்டர் ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

கிரண் டொர்னாலா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஆப்பிள் பைனாப்பிள் இசையமைக்க, பவன் கவுடா படத் தொகுப்பு செய்கிறார். சசி தூரி தயாரிப்பு நிர்வாகத்தை கவனிக்க, ஹஸ்வத் சரவணன் பி.ஆர்.ஓ பணியை கவனிக்கிறார்.

க்ரைம், சஸ்பென்ஸ், திரில்லர், ஜானரில் உருவாகும் இப்படத்தின் தலைப்பு போஸ்டரை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டார்.

அதேபோல், படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட, சமூக வலைத்தளங்களில் வைரலானதோடு படத்தின் மீது மிகப் பெரிய எதிர்ப்பார்ப்பும் ஏற்பட்டிருந்தது.

தற்போது இந்த ‘கிரிமினல்’ படத்தின் மோசன் போஸ்டரை பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் டிசம்பர் 5-ம் தேதி மாலை 6.06 மணிக்கு வெளியிட்டு படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே படத்தின் தலைப்பு போஸ்டர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தமிழ் சினிமாவின் இரண்டு ஜாம்பவான்கள் வெளியிட்டு வைரலாக்கிய நிலையில், தற்போது தமிழ் சினிமாவில் அதிகப் படங்களின் நடித்து வரும் நாயகனாக உருவெடுத்துள்ள ஜி.வி.பிரகாஷ் குமார், மோசன் போஸ்டரை வெளியிட்டுள்ளதால் இந்தக் ‘கிரிமினல்’ படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.

Our Score