full screen background image

ஃப்ரைடே – திரைப்பட விமர்சனம்

ஃப்ரைடே – திரைப்பட விமர்சனம்

Starring: Dheena, Anish Masilamani, Mime Gopi And Others.

Banner: Dakdam Motion Pictures Written & Directed by: Hari Venkatesh Produced by: Anish Masilamani Music Director: Dumae DOP: Johny Nash Editor: Pravin. M VFX: Selva Ramesh Art: Karthi Loga Co Direction: Surya Gandhimathi Assistant Directors: Dharani, Ragun, Sarathi Action: Abinash Aathi SFX: Arun G Kiran 2D Animation: Shyam Potter Pre mix , Stem Mix , 5.1 Surround Mix & Mastered : Biju Antony @SoundB Records Colorist: Premkumar. G Makeup: Nila Jeevan Additional Cinematographers: Kavin Asker, Nataraj Publicity Design: Abyjith Veera Production Manager : Udhayakumar PRO: Thiru

வார கடைசி வேலை நாளான ஃப்ரைடே அடுத்த இரண்டு நாள் ஓய்வை எப்படி அனுபவிக்கலாம் என்ற ஒரு ஏக்கத்தை ஏற்படுத்தும் நாள். அந்த ஒரு ஃப்ரைடேயின் நள்ளிரவில் நடக்கின்ற சம்ஹாரம்தான் இந்த ஃப்ரைடே திரைப்படம்.

படத்தின் நாயகனான அனீஸ் மாசிலாமணி, தினாவுடன் இணைந்து ஒரு சம்பவம் செய்ய போகிறார். போன இடத்தில் சம்பவத்தை முழுமையாக செய்ய முடியாமல் கத்திக் குத்து காயம்பட்ட தீனாவுடன் திரும்பி வருகிறார்.

அதே நேரம் அனுஷை போட்டு தள்ள ஒரு டீம் செயல்பட்டு வருகிறது. அந்த செயலுக்கு தீனாவும் உடந்தையாக இருக்கிறார். தன்னுடைய துரோகத்தை அனீஷ் மீது வீசுகிறார் தீனா.

இன்னொரு பக்கம் லோக்கல் தாதாவாக இருக்கும் மைம் கோபி அவர் சார்ந்த கட்சியில் எம்.எல்.ஏ. சீட் கேட்டு ஆவலுடன் காத்திருக்கிறார்ய ஆனால் அந்த சீட் அவருக்கு கிடைக்காமல் இன்னொருவருக்கு போகிறது. அதனால் எப்படியாவது அந்த ஆளைப் போட்டு தள்ளிவிட்டு தான் எம்எல்ஏ சீட்டை பெற வேண்டும் என்று மைம் கோபி நினைக்கிறார்.

இந்தக் கொலைகள் எல்லாம் ஒரே நாள் இரவில் நடந்த அரங்கேறுகிறது. இதில் மைம் கோபியின் திட்டம் நிறைவேறியதா.. அனீஸ் மாசிலாமணியை தீனா என்ன செய்தார்.. ஏன் அனீஷை கொலை செய்ய முயல்கிறார்களை என்ற கேள்விகளுக்கெல்லாம் நான் லீனியர் திரைக்கதை மூலம் பதில் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

நாயகன் போல் நடித்திருக்கும் அனீஸ் மாசிலாமணி புதுமுக நடிகர் என்பதால் அவருடைய தோற்றமே அவருக்கு ஒரு ரவுடி என்ற பட்டத்தை கொடுக்கிறது. கத்தி எடுத்தவன் கத்தியால்தான் சாவான் என்பதுபோல தனக்கும் கத்தியால்தான் விடுதலை கிடைக்கும் என்பதை உணர்ந்திருக்கும் அனீஷ் தன்னுடைய தம்பியை இந்த ரவுடித் தொழிலுக்குள் வர விடாமல் தடுக்கும்போதும், தம்பி மீது அவர் பாசத்தை கொட்டுகின்ற பொழுதும் மிக மிக எதார்த்தமான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

பழி வாங்கத் துடிக்கும் தின கத்தி குத்தப்பட்டு பரிதாபமாக இருக்கும்பொழுது அவர் காட்டுகின்ற நடிப்பும் நிஜமாகவே தீனாவுக்கு இந்த திரைப்படம் ஒரு ஸ்பெஷல் என்று சொல்ல வைத்திருக்கிறது. படத்தின் திரைக்கதையை குலைத்து போடும்விதமாக தீனா செய்யும் அந்த நடவடிக்கைதான் நம்மை சீட்டு நொடிக்கு கொண்டு வந்து உட்கார வைத்து படத்தை இறுதி வரையிலும் பார்க்க வைத்திருக்கிறது.

தன்னுடைய வலிமையான ஜென்டில்மேன் வில்லன் கதாப்பாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார் மைம் கோபி. அவரும் அனீஷாவும் பேசுகின்ற அந்த மூன்று நிமிட காட்சி படத்துக்கு மிக மிக முக்கியமானது. அதை மிக அழகாக பதிவு செய்திருக்கிறார்கள்.

இவர்களுடன் கலையரசன், சித்ரா சேனன், சித்து குமரேசன், ராமச்சந்திரன் துரைராஜ் என்று ஒரு பெரும் கூட்டமே சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் படத்தின் எதிர்பார்ப்பை பெரிதும் கூட்டியிருக்கிறார்கள்

அதிலும் சித்த குமரேசன் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் தன்னுடைய பழி வாங்கலை செய்யும் பொழுது அடடா என்று நம்மையும் சொல்ல வைத்திருக்கிறார். சித்து குமரேசன் செய்யும் கொலை பாமர மக்களுக்கு நியாயமானது என்றாலும் சட்டப்படி தவறல்லவா..

இப்படியும் சில இடங்களில் நடந்திருக்கிறது என்பதாகவே இயக்குநர் காட்டியிருப்பதாக நம் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், இந்தப் படத்தில் ஏற்க முடியாத ஒரு சம்பவம் இன்ஸ்பெக்டர் சித்து குமரேசன் சம்ஹாரம் செய்வதுதான்.

ஒரே நாள் இரவு என்பதால் படத்தின் ஒளிப்பதிவு அவ்வளவு அழகாக கலர், கலராக இல்லாமல் ஒரே மாதிரியான வெளிச்சத்திலேயே படத்தை பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜானி தாஸ். கண்டெய்னர் குடோனில் நடக்கும் துப்பாக்கி சண்டையை படமாக்கியவிதம் அருமை.

இது போன்ற சஸ்பென்ஸ், திரில்லர் திரைப்படங்களுக்கு மிக மிக அவசியமான ஒன்று பின்னணி இசை. அந்த இசையை இந்தப் படத்தில் மிக அழகாக கொடுத்து, தேவையான இடங்களில் மட்டும் இசையை ஒலிக்கவிட்டுவிட்டு தேவையில்லாத இடங்களில் மௌனமாக்கி படத்தின் கடைசிவரையிலும் காட்டும் ஒரு இருண்மையை அனுபவிக்க வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் டுமே.

நான் லீனியர் வகையில் ஊர் கதைகள் சில இடங்களில் விட்டு விட்டு வருவதோடு அதையும் ரசிக்கும் வகையில் தொகுத்துக் கொடுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் கே.எம்.பிரவீன்.

உலகம் முழுவதுமே கமர்சியல் திரைப்படங்களில் ஆயுதங்கள் செய்யும் சம்பவங்கள்தான் இன்று இளைய தலைமுறையினரை தியேட்டர் பக்கம் இழுத்துப் பிடிக்கிறது இந்தப் படமும் அதையேதான் செய்திருக்கிறது.

அதிகப்படியான இரத்தம் சிந்தாமல் ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு நியாயம், தர்மம் இருக்கும், அவரவர் தர்மத்தை அவரவர்தான் பெற முடியும் என்கின்ற ஒரு கான்செப்டில் இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஹரி வெங்கடேஷ்.

தங்களால் முடிந்த அளவுக்கான நடிப்பை நடிகர்கள் கொடுத்திருக்க அனைத்து தொழில் நுட்பக் கலைஞர்களும் தங்களுடைய திறமையை காட்டியிருக்க… இயக்குநர் ஹரி வெங்கடேஷ் அனைத்தையும் ஓரளவுக்கு ஒன்றாக்கி படமாக்கித் தந்திருக்கிறார். அந்த வகையில் இந்தப் படத்தை நிச்சயம் ஒருமுறை பார்க்கலாம்தான்.

RATING : 3 / 5

Our Score