பெரியவர் பிலிம் நியூஸ் ஆனந்தனின் சாதனைகள்..!

பெரியவர் பிலிம் நியூஸ் ஆனந்தனின் சாதனைகள்..!

இன்று காலமான தமிழ்த் திரையுலக என்சைக்ளோபீடியாக என்று அழைக்கப்படும் பெரியவர் பிலிம் நியூஸ் ஆனந்தனின ்சாதனைகள் பற்றிய சிறு தொகுப்பு இது :

P.R.O தொழில் உருவாகியது எப்படி? - பிலிம் நியூஸ் ஆனந்தன் பேட்டி

பள்ளி நாட்களில் நாடகங்களில் நடிப்பது, கதை, வசனம் எழுதுவது வழக்கம். இதுவே எனது கலை ஆர்வத்திற்கு வித்து. சிறு வயது முதல் புகைப்படம் எடுக்கும் ஆர்வம். எனது யுக்தியால் இரட்டை வேடப் படம் பாக்ஸ் கேமிராவில் எடுத்தேன். இதைக் கண்ட என்.எஸ்.கே.யின் ஒளிப்பதிவாளர் சி.ஜெ.மோகன், ஒளிப்பதிவு செய்யும் கலையை எனக்குக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார். அவர் கூறிய யோசனைப்படி விலையுயர்ந்த ஸ்டில் கேமிராவை வாங்கி படங்கள் எடுக்க ஆரம்பித்தேன்.

1954-ல் பிலிம் சேம்பர் பத்திரிகைக்காக ஸ்டுடியோவில் நடக்கும் படப்பிடிப்பை பற்றிப் செய்தி சேகரிப்பதற்காக நியமிக்கப்பட்டேன். திரைக் கலைஞர்களை கேமராவில் படம் பிடித்தேன்.

எனது கல்லூரித் தோழன் சி.டி.தேவராஜன் நடத்தி வந்த ‘பிலிம் நியூஸ்’ பத்திரிகையில் நான் எடுத்த படங்கள் வெளிவந்தன. இதனால் இந்த சாதா ஆனந்தன், ‘பிலிம் நியூஸ்’ ஆனந்தனாக மாறினேன்.

நடிகர் சங்கத்தின் ‘நடிகன் குரல்’ பத்திரிகையின் போட்டோ - ஜர்னலிஸ்ட் - ஆக மாறினேன். அதன் ஆசிரியர் வித்வான் வே.லட்சுமணன், ‘நடிகன் குரலின்’ பதிப்பாளர் என்ற முறையில் எம்.ஜி.ஆர். அவர்களை தினமும் சந்திப்பார். அவருடன் நானும் செல்வேன்.

1958 எம்.ஜி.ஆர். ‘நாடோடி மன்னன்’ படம் தயாரித்துக் கொண்டிருந்த நேரம் அவரது அலுவலக மேலாளராக அப்போது இருந்தவர் திரு. ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் ஒரு நாள் அவரைப் பார்க்க நான் சென்றபோது, அவரது மேஜையில் ‘நாடோடி மன்னன்’ படத்தின் ஸ்டில்கள் இருந்தன. அப்போதெல்லாம் பத்திரிகைகளுக்கு விளம்பர ஏஜெண்ட் மூலமாகத்தான் சினிமா ஸ்டில்களை அனுப்புவது வழக்கம்.

அப்போது எனக்கு திடீரென்று ஒரு யோசனை வந்தது. உடனேயே நான் ஆர்.எம்.வீரப்பனிடம், “ஐயா பத்திரிகையாளர்கள் அனைவரும் எனது நண்பர்கள், இந்த ஸ்டில்களை அவர்களுக்கு நானே கொண்டு போய் கொடுக்கட்டுமா..?” - என்று கேட்டேன். “பத்திரிகைகளில் ஸ்டில் வர வேண்டும், இதை யார் கொடுத்தால் என்ன? நீங்களே கொடுங்களேன்” என்று சொல்லி ஸ்டில்களை என்னிடம் கொடுத்தார். அடுத்த வாரமே எல்லா பத்திரிகைகளிலும் ஸ்டில்கள் ஜொலித்தன. இதைப் பார்த்து எம்.ஜி.ஆர். பாராட்டினார். P.R.O. என்ற புதிய தொழில் இந்தத் தமிழ்த் திரையுலகில் ஆரம்பமாவதற்கு இதுதான் காரணமான சம்பவம்தான்.." என்றார்.

பிலிம் நியூஸ் ஆனந்தனின் கல்லூரி தோழனான சி.டி.தேவராஜ் நடத்திய 'பிலிம் நியூஸ்' பத்திரிகையில் நிருபராகவும் புகைப்பட கலைஞராகவும் பணிபுரிந்தார் - பிலிம் நியூஸ் ஆனந்தனாக மாறியதற்கு காரணமானவர்.

'ஸ்டார் வாய்ஸ்' (வார இதழ்) ஆசிரியராக பணி புரிந்தார். வெளியிட்டவர் மயிலை குருபாதம் (தயாரிப்பாளர்).

'பிலிம் நியூஸ்' (மாத இதழ்) ஆசிரியராக பணி புரிந்தார். வெளியிட்டவர் : டைமண்ட் பாபு (2006).

'பிலிம் சேம்பர்' பத்திரிகையில் தன்னுடைய கடைசிக் காலம் வரையிலும் பணியாற்றி வந்தார்.

திரு. பிலிம் நியூஸ் ஆனந்தன் எழுதி, தொகுத்தளித்த புத்தகங்கள்

1) மாண்புமிகு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, தமிழக அரசின் முழு நிதி உதவியுடன் 'சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு' நூல் தயாரித்தது (2004),

2) நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு செவாலியே விருது வழங்கப்பட்டபோது அவரைப் பற்றிய 'சாதனை மலர்' தயாரித்தது (1995).

3) திரைக் கலைஞர்கள் விலாசங்கள் கொண்ட ‘திரைக்கலை தொகுப்பு’ - நூல் தயாரித்தது (1978).

4) ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் தேதி அன்று திரையுலகினருக்கும், பத்திரிகைகளுக்கும் உபயோகப்படும் வகையில், முந்தைய ஆண்டின் திரையுலக செய்திகளை தாங்கிய ‘திரைப்பட புள்ளி விபரம்’ - என்கிற நூலை, 1954-ம் ஆண்டு முதல் ஆண்டு சென்ற ஆண்டுவரையிலும் தொடர்ந்து இலவசமாக வழங்கி வந்தார்.

5) திரை நட்சத்திரங்களின் 100-வது படம் வெளிவரும்போது, ஜெயலலிதா, கே.ஆர்.விஜயா, கமல்ஹாசன், சிவக்குமார் ஆகியோருக்கு ஆல்பம் தயாரித்தது.

6) கமஸ்ஹாசனின் 200-வது படமான ‘ஆளவந்தான்’ படம் வெளியிட்ட அன்று பட ஆல்பம் நூல் தயாரித்தது (2001).

7) நடிகர் திலகம் சிவாஜியின் 150-வது படமான ‘சவாலே சமாளி’ படம் வெளியானபோது மலர் வெளியிட்டது (1971).

8) கலைஞர் சின்ன அண்ணாமலை அவர்களுக்காக ‘நடிகர் திலகம்’ - என்ற பெயரில் புகைப்பட ஆல்பம் நூல் தயாரித்தது. காங்கிரஸ் தலைவர் திரு.காமராஜ அவர்களால் வெளியிடப்பட்டது (1969).

9) 'நெஞ்சில் நிலைத்து நின்று, நினைவை விட்டு அகலாத கவிஞர்களின் திரை இசைப் பாடல்கள்' - என்ற பெயரில் கவிஞர்களின் பாடல் தொகுப்பு நூல் தயாரிக்கப்பட்டது (2008).

தமிழ்த் திரையுலகத்தின் 50-வது ஆண்டை முன்னிட்டு, தமிழ்த் திரையுலக கண்காட்சி 10 நாட்கள் தொடர்ந்து நடத்தப்பட்டது.

1981-ல் தமிழ்த் திரையுலகில் சாதனைகள் செய்த கலைஞர்கள் 10 பேர்களில் ஒருவராக கௌரவப்படுத்தப்பட்டார்.

தமிழக அரசு சுற்றுலா பொருட்காட்சியில், சினிமா உலக கண்காட்சி தொடர்ந்து மூன்று முறை சென்னையில் நடத்தப்பட்டு மூன்றாண்டும் சிறந்த அரங்குக்கான விருது கிடைத்தது.

மதுரை சுற்றுலா பொருட்காட்சியில் சினிமா உலக கண்காட்சி நடத்தி சிறந்த அரங்கு விருது கிடைத்தது.

உலகப் பட விழாக்களின் போது தெலுங்கு, மலையாளப் பட கண்காட்சி முறையே ஹைதராபாத்திலும் திருவனந்தபுரத்திலும் நடத்தப்பட்டது.

என்.டி.ஆரின் பட கண்காட்சி ஹைதராபாத்தில் ஆந்திரா பிலிம் சேம்பர் சார்பாக நடத்தப்பட்டது.

நடிகர் கமல்ஹாசன் பிறந்த நாளில் மூன்று முறை கண்காட்சி நடத்தப்பட்டது.

தெலுங்கு திரைப்பட வைர விழாவின் போது தெலுங்கு பத்திரிக்கையாளர் சங்கம் சார்பாக சென்னையில் நடத்தப்பட்டது.

திரைப்பட நடிகைகள் அஞ்சலி தேவி, ஜமுனா-வாணிஸ்ரீ ஆகியோரில் வெள்ளி விழாவின்போது ஹைதராபாத்தில கண்காட்சிகள் நடத்தப்பட்டன.

CINEMA TODAY சார்பில் 78 ஆண்டு தமிழ் சினிமா கண்காட்சி 2009-ம் ஆண்டு நடத்தப்பட்டது.

திரு.பிலிம் நியூஸ் ஆனந்தன் பெற்ற பட்டங்கள்

‘கலைமாமணி - தமிழக அரசு (1991)

‘கலைச் செல்வம் - நடிகர் சங்கம் (1997)

‘திரைத்துறை அகராதி’ - கண்ணதாசன் மையம்

‘நடமாடும் பல்கலைக்கழகம்’ - ராஜபாளையம் ரசிகர் மன்றம்

‘1997- ம் ஆண்டின் சிறந்த மனிதர்’ விருது அமெரிக்க, வடக்கு கெரோலினா சர்வகலா சாலை வாழ்க்கை வரலாறு கழகம் - வழங்கியது.

தெலுங்கு தயாரிப்பாளர் வெங்கண்ண சௌத்ரி வழங்கிய 'கலா பீடம்' விருது (1986)

காமராஜர் தேசிய சங்கம் வழங்கிய 'செய்தி சிகரம்'

ராஜ் கதிரின் கலாலயா அமைப்பு வழங்கிய 'கலை மூதறிஞர்' விருது

தென்னிந்திய திரைப்பட இயக்குநர்கள் சங்கம்  வழங்கிய 'கௌரவ இயக்குநர் விருது'

‘நடமாடும் திரையுலகக் கலைக்களஞ்சியம்’ – நடிகர் சிவக்குமார் வழங்கியது

‘சினிமா செய்தி தந்தை’ – நடிகர் மௌலி வழங்கியது.

திரையுலக உ.வே.சா. - நடிகர் யூகி சேது வழங்கியது.

திரு.பிலிம் நியூஸ் ஆனந்தன் பெற்ற விருதுகள்

அஞ்சலி தேவியை தலைவராகக் கொண்ட வி.நாகையா நினைவு சாதனையாளர் விருது (2008).

லயன்ஸ் கிளப் இண்டர்நேஷனல் வழங்கிய சாதனையாளர் விருது

சென்னை மவுண்ட் ரோட்டரி கிளப் வழங்கிய சிவாஜி விருது

புதுக்கோட்டை ரோட்டரி கிளப் வழங்கிய 'Vocational Award' - 2003

1990-ம் ஆண்டில் பிலிம் நியூஸ் ஆனந்தனின் 61-வது பிறந்த நாளை தமிழ்த் திரையுலகமே சிறப்பாக நடத்தியது.

தமிழக அரசு நடத்திய 'நட்சத்திர இரவு' சிறப்பாக நடைபெற உதவியதற்காக முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களால் மோதிரம் அணிவிக்கப்பட்டது.

சிறந்த பி.ஆர்..ஓ விருது - தமிழ்நாடு டி.வி.பார்வையாளர் சங்கம்.

1989-ல் திரையுலகத்தின் 75 ஆண்டு வைர விழவில் 'அகில இந்திய அளவில் சாதனை புரிந்தவர்கள்' என்ற முறையில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை 75 பேரில் ஒருவராக தேர்ந்தெடுத்து கௌரவித்தது.

2002-ல் பிலிம் நியூஸ் ஆனந்தன் 52 ஆண்டுகளாக சேகரித்து வைத்திருந்த திரை சம்மந்தப்பட்ட கலை பொக்கிஷங்களை தமிழக அரசு அரசுடமை ஆக்கிக் கொண்டது, அவைகளை வைத்து நிரந்தர கண்காட்சி ஒன்றினை அமைக்க திட்டம் வகுத்துள்ளது.

எஸ்.எஸ்.வாசன் விருது

எல்.வி.பிரசாத் விருது

சிவாஜி விருது

எம்.ஜி.ஆர். சிவாஜி அகாடமி விருது(2003)

மெகா பைன் ஆர்ட்ஸ் எம்.ஜி.ஆர் விருது

மதி ஆர்ட்ஸ் அகாடமி காமராஜர் விருது

TTN விருது(2004)

வெரைட்டி பிலிம் விருது(2008)

சினிமா ரசிகர் சங்கம்- விருது மூன்று முறை 1980; 1988; பொன் விழாவில் 1995.

வல்லமை தாராயோ- இயக்குனர் மதுமிதா நடத்திய பாராட்டு விழா(2008)

ஸ்ரீ ராமானுஜர் டிரஸ்ட் விருது (2008)

வி.4 விருது

ஓம் சக்தி அகாடமி (பொன் விழாவில் விருது)

தமிழக அரசின் நிதி உதவியுடன் தயாரிக்கப்பட்ட 'சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு' தயாரித்தற்காக, சென்னை சினிமா ரசிகர்கள் சங்கமும், தமிழ்நாடு டி.வி.பார்வையாளர் சங்கமும் இணைந்து, விழா எடுத்து கௌரவித்தது.

ஜெய்சங்கர் அவர்களால் கீழ்பாக்கம் உடல் ஊனமுற்றவர்கள் இல்லத்தில் கௌரவிக்கப்பட்டார்.

வி.ஜி.பி.- தம்ஸ் அப் – அஜந்தா

அம்பத்தூர் கலைக் கழகம் வழங்கிய ரைசிங் ஸ்டார் பிலிம் விருது(2008).

சிவாஜி - பிரபு அறக்கட்டளை சார்பில் சிவாஜி கணேசன் பிறந்த நாளில் கௌரவிக்கப்பட்டார் (2008).

CINEMA TODAY சார்பாக விருது (2007)

பத்திரிகைகள் வழங்கிய விருதுகள்

சினிமா எக்ஸ்பிரஸ் விருது

தமிழ் மூவிஸ் விருது

தினகரன் விருது

விக்டரி சினிமா டைரி விருது

ரைசிங் ஸ்டார் விருது

ஹதராபாத் பிலிம் கிளப் வெள்ளி விழா ஆண்டு விருது

தமிழக அரசின் “கலைமாமணி” விருது பெற்றதர்க்கு பாராட்டு விழா

சென்னையில் 75 ஆண்டு தெலுங்கு சினிமா கண்காட்சி நடத்தியமைக்கு, தெலுங்கு சினிமா பத்திரிகையாளர் சங்கம் பாராட்டு விழா

சூப்பர் சினிமா - வெரைட்டி சினிமா விருது(2008).

டி.வி.சேனல்களில் பெற்ற விருதுகள்

விஜய் டி.வி.(சாதனையாளர் விருது) (2008)

ராஜ் டி.வி. வழங்கிய 75 ஆண்டு திரை உலகம் விருது (2008)

இந்து டி.வி விருது.(2008)