full screen background image

விஜய்சேதுபதியின் மகன் சூர்யா அறிமுகமாகும் ஃபீனிக்ஸ் திரைப்படம்

விஜய்சேதுபதியின் மகன் சூர்யா அறிமுகமாகும் ஃபீனிக்ஸ் திரைப்படம்

இந்திய சினிமாவின் மிகவும் பிரபலமான மற்றும் வெற்றிகரமான சண்டைப் பயிற்சி இயக்குநரான அனல் அரசு, 12 ஆண்டுகளுக்கும் மேலாக சண்டைப் பயிற்சி கலைஞராக இருந்து சண்டைப் பயிற்சி இயக்குநராக மாறினார். 

அவர் இப்போது ஃபீனிக்ஸ் என்ற படத்தின் மூலம் இயக்குநர் மற்றும்  தயாரிப்பாளராக  மாறியுள்ளார்.

இந்தப் படத்தை ஏ.கே.பிரேவ்மேன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் ராஜலக்ஷ்மி அரசகுமார் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நாயகனாக அறிமுகமாகிறார்.

விக்னேஷ், வர்ஷா விஸ்வநாத்,  அபி நக்ஷத்ரா, சத்யா NJ, சம்பத், ஹரீஷ் உத்தமன், திலீபன், ‘அட்டி’ ரிஷி, பூவையார் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

எழுத்து மற்றும் இயக்கம் : ‘அனல்’ அரசு, தயாரிப்பு : ராஜலட்சுமி அரசகுமார், இசை : சாம் CS, ஒளிப்பதிவு: R. வேல்ராஜ், படத் தொகுப்பு : பிரவீன் KL, தயாரிப்பு வடிவமைப்பு: K.மதன், சண்டைப் பயிற்சி: அனல் அரசு, ஆடை வடிவமைப்பு: சத்யா NJ, நிர்வாக தயாரிப்பு: MS முருகராஜ், பத்திரிக்கை தொடர்பு: ரியாஸ்.K.அஹமத்.

படத்தின் தொடக்க விழாவில் பேசிய இயக்குநர் அனல் அரசு, “ஒரு இயக்குநராக தனது முதல் திரைப்படம் சிறந்த படைப்பாக கொடுக்க ஆவலுடன் இருப்பதாக” கூறினார்.

கதாநாயகன் தேர்வு குறித்து அவரிடம் கேட்டபோது, “நாங்கள் ‘ஜவான்’ படப்பிடிப்பில் இருந்தபோது, விஜய் சேதுபதியின் மகன் தனது தந்தைக்கு மதிய உணவு பரிமாறுவதற்காக செட்டுக்கு வந்திருந்தார். அவர் அதிரடியான சண்டைக் காட்சிக்கான தயாரிப்பை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார். அப்போதுதான் என் கதையில் நடிக்க அவர் பொருத்தமானவராக என்பதை உணர்ந்தேன்.

இந்த எண்ணத்தை விஜய் சேதுபதியிடம் பகிர்ந்து கொண்டபோது, சூர்யா இந்த கதைக்கு பொருத்தமானவர் என்பதால் இதைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.

மேலும் இந்த படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அவரை அறிமுகப்படுத்துவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்” என்றார்.

செய்தியாளர்களிடம் அறிமுக நாயகன் சூர்யா பேசும்பொழுது, “நீண்ட நாட்களாகவே சண்டைக் காட்சிகளில் நடிக்க விரும்பினேன். அப்படி ஒரு வாய்ப்பு வரும்போது, அதை சரியாகப் பயன்படுத்த நினைத்தேன். அதனால்தான் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். மேலும் இந்த படத்திற்காக 6 மாதம் பயிற்சி எடுத்தேன். இந்த படத்தில் நடித்து தந்தையின் ஆதரவு இல்லாமல் தானே தனக்கான பெயரைத் உருவாக்குவேன்..”  என்றார்.

Our Score