பிரபல நட்சத்திரங்களை, அவர்களின் ரசிகர்களோடு இணைக்கும் தனித்துவமான பொழுதுபோக்கு தளம் , (FANLY entertainment) ஃபேன்லி என்டர்டெயின்மென்ட் – ஐ நடிகர் திரு.சிவகார்த்திகேயன்,திரு.புல்லேலா கோபிசந்த்,திரு.குகேஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
ஃபேன்லி எண்டெர்டெயின்மெண்ட் தொடக்க விழாவில், பேட்மிண்டன் பயிற்சியாளர் பத்மபூஷன் திரு.புல்லேலா கோபிசந்த், உலக செஸ் சாம்பியனும், மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது பெற்றவருமான குகேஷ், ஊபெர் நிறுவனத்தின் மூத்த பொறியியல் இயக்குநர் திரு. மணிகண்டன் தங்கரத்தினம், ஃபேன்லி செயலியின் இணை நிறுவனர்கள் திரு.சரவணன் கனகராஜு மற்றும் திரு.ஸ்ரீனிவாசன் பாபு உள்ளிட்டோர் பங்குபெற்று சிறப்பித்தனர்.
தன்னுடைய வசீகரமான நடிப்பால் மக்கள் மத்தியில் புகழ்பெற்ற நடிகரும் தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் இந்த தளத்தை தொடங்கி வைத்தது பொழுது போக்கு செயலிகள் மற்றும் இணையதளத்தில் புதிய உற்சாகத்தை வழங்கியுள்ளது.
ஃபேன்லி என்டர்டெயின்மென்ட் என்பது இதுவரை இல்லாத அளவில் நட்சத்திரங்களை அவர்களின் ரசிகர்களோடு ஒருங்கிணைக்கும் தளமாகும்.செயலிகளில் புரட்சியை ஏற்படுத்தியுள்ள இந்த தொடக்கம், ஒரே இடத்தில் ரசிகர்களின் ஆதர்ச நாயகர்கள் மற்றும் நாயகிகள் ஒரே தளத்தில் இணைப்பதோடு, பாதுகாப்பையும் உறுதி செய்கிறது.
தொழில்நுட்ப வளர்ச்சியின் பாதையில், இன்றைய டிஜிட்டல் உலகம் போலி செய்திகளையும், போலி கணக்குகளையும் வழங்கி ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வரும் சூழலில் அவற்றிற்கு மாற்றாக, ஏமாற்றத்தை வழங்காமல், ரசிகர்கள் முழுக் கொண்டாட்டத்தையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும் பாதுகாப்பான இடத்தை வழங்குவதை ஃபேன்லி தனது முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த தளத்தின் முதல் நட்சத்திரமாக, மக்களின் மனதில் தனக்கென தனியிடம் பிடித்துள்ள தமிழ் சினிமாவின் ஐகானிக் ஸ்டார், சிவகார்த்திகேயனை இணைப்பதில் ஃபேன்லி மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறது.
மேலும் பல நட்சத்திரங்கள் இந்த தளத்தில் விரைவில் இணைய உள்ளனர். ரசிகர்கள் ஃபேன்லி செயலியை ஆப் ஸ்டோர் அல்லது பிளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
இந்தியாவின் முதன்மையான பொழுதுபோக்கு வடிவங்களில் முக்கிய இடம் பிடித்துள்ள சினிமாவிற்கு தற்போதுவரை, சமூகத்தை உணமையாக இணைக்கும் பிரத்யேக டிஜிட்டல் தளம் இல்லை என்று தெரிவித்த இந்த செயலியின் நிறுவனர்களான சரவணனன் கனகராஜு மற்றும் ஸ்ரீனிவாசன் பாபு ஆகியோர், ஃபேன்லி செயலி மூலம், ரசிகர்கள் திரை நட்சத்திரங்களுடன் முன்னெப்போதும் இல்லாத அனுமதியைப் பெறுகின்றனர்.
அதே நேரத்தில் நட்சத்திரங்கள் தங்கள் தனிப்பட்ட ரசிகர் பட்டாளத்தை வளர்க்க இந்தச் செயலி மூலம் அதிகாரம் அளிக்கிறார்கள். நீங்கள் ஒரு தேசிய நட்சத்திரமாக இருந்தாலும், மாநில நட்சத்திரமாக இருந்தாலும், அல்லது தொழில்துறையை நேசிக்கும் ஒருவராக இருந்தாலும், ஃபேன்லியின் பொழுதுபோக்கு தளம் உங்கள் ரசிகர்களின் ஈடுபாட்டை ஒரு புதிய நிலைக்கு கொண்டு செல்ல அமைக்கப்பட்டுள்ள இடமாகும்.
ஃபேன்லி ஆப்பின் சிறப்பம்சங்கள் இதனை இன்னும் மேன்மைப்படுத்துகின்றன. அவை, நட்சத்திரங்கள் பிரத்யேக தகவல்களைப் அந்த செயலி மூலம் பகிர்ந்து கொள்வார்கள். தனிப்பட்ட புதிய தகவல்களை அனுப்புவார்கள் மற்றும் தனிப்பட்ட ரசிகர் நிகழ்வுகளை நடத்துவார்கள்.
ரசிகர்களும், ரசிகர் மன்றங்களுடனான தொடர்பை இந்த செயலி மூலம் பெறுவார்கள். பிரத்யேக முழக்கங்களைப் பகிரவும், சிறப்புத் தயாரிப்புகளை வாங்கவும், மேலும் நேர்மறையான செயல்பாடுகளுக்கு பரிசுகளையும் இந்த செயலிமூலம் பெறுவார்கள்.
ஃபேன்லியின் முதன்மை AI கருவியான செண்டிமீட்டர்(senti’meter), ஆக்கபூர்வமான பின்னூட்டங்கள் / விமர்சனங்களை கட்டுப்படுத்தாமல் உள்ளடக்கத்தை மிதப்படுத்துவதன் மூலம் ஒரு மரியாதைக்குரிய சமூகத்தை ஊக்குவிக்கிறது, அதே நேரத்தில் நேர்மறையை வெகுமதி அளிக்கிறது.
பாரம்பரிய சமூக தளங்களின் கூச்சல்களுக்கு அப்பால் பிரபலங்களும் ரசிகர்களும் அர்த்தமுள்ள, கருத்துப் பரிமாற்றம் செய்யும் உறவுகளை உருவாக்கும், பாதுகாப்பான, தொகுக்கப்பட்ட இடமாக ஃபேன்லி ஆப் செயல்படும்.
கிளவுட் தொழில் நுட்பத்தில் செயல்படும் ஃபேன்லி ஆப் வரையறுக்கப்பட்ட மற்றும் தடையின்றி ஒருங்கிணைக்கூடிய பொழுதுபோக்கின் எதிர்காலத்திற்காக கட்டமைக்கப்பட்டுள்ளது.












