அடிதடி, வெட்டு குத்து அருவா – சண்டை இல்லாத வட சென்னை மக்களின் வாழ்வியலை சொல்லும் படம் ‘All PASS(ஆல் பாஸ்)’.
இத்திரைப்படம் வட சென்னை மக்களின் எதார்த்த வாழ்வியலை பேசும் படமாக உருவாகி வருகிறது. மைதீன் இயக்குகிறார். ஒன்ஸ் ஸ்டெப் என்டர்டெயின்மெண்ட் (One Step Entertainment) என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் மோகனா.R இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.
‘நிறங்கள் மூன்று’, ‘தருணம்’ போன்ற படங்களில் நடித்த துஷ்யந்த் கதாநாயகனாக நடித்துள்ளார். ‘பிக் பாஸ்’ மூலம் மக்களிடையே பிரபலமாகி ‘லியோ’ படத்தில் ஒரு முக்கிய கதாபத்திரத்தில் நடித்திருந்த ஜனனி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். மற்றும் ஜெயபிரகாஷ், செந்திகுமாரி, இயக்குநர் சுப்பிரமணிய சிவா, வினோதினி, பிரசன்ன பாலச்சந்திரன், மோகனா R.சத்யா ஆகியோர் நடித்துள்ளனர்.
இவர்களுடன் ‘பாண்டிய நாடு’, ‘எதிர் நீச்சல்’ போன்ற படங்களின் மூலம் பிரபலமான சரத் லோகிஸ்தவா இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க, ‘பாபநாசம்’ படத்தில் வில்லனாக நடித்த ரோஷன் பஷீர்,’ பைசன்’ படத்தில் பி.டி வாத்தியாராக நடித்த அருவி மதன் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இயக்குனர் மூர்த்தி மற்றும் கலையரசன் கண்ணுசாமி காமெடியனாக நடித்துள்ளனர். மற்றும் மாஸ்டர் ஸ்பைடர் சஞ்ஜெய், கோகுல், நிகில் மூவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
‘கலகத் தலைவன்’, ‘அண்ணாதுரை’, ‘தகராறு’ போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த தில்ராஜு இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘சுப்ரமணியபுரம்’ படத்தின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல பாடலாசிரியர் மோகன் ராஜன் பாடல் வரிகளை எழுதியுள்ளார்.









